“இல்லத்தரசிகள் ஈசியாக வேலை செய்ய உதவும் ஹோம் டிப்ஸ்..!” – நீங்களும் யூஸ் பண்ணுங்க..!

வீட்டை சுத்தப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் வீட்டில் இருக்கும் பொருட்களை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும், வைத்துக்கொள்ள தினமும் இல்லத்தரசிகள் பல விதமான வேலைகளை கையாளுகிறார்கள். அப்படி அவர்கள் செய்யும்  வேலை சிறப்பாக அமையவும், எளிதாக செய்யவும் சில ஹோம் டிப்ஸை இந்தக் கட்டுரையில் விரிவாக பார்த்து தெரிந்து படித்து தெரிந்து கொள்ளலாம்.

இந்தக் குறிப்புகளை நீங்கள் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் வேலைகளை நீங்கள் சுலபமாக செய்துவிடலாம். அது மட்டும் அல்லாமல் சுத்தப்படுத்துவதும் மிக எளிதாக இருக்கும்.

இல்லத்தரசிகளுக்கான எளிய ஹோம் டிப்ஸ்

உங்கள் வீட்டில் நீங்கள் பயன்படுத்துகின்ற ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பொருட்கள் நிறம் மங்கி காட்சியளிக்கிறது என்றால், இனி அதைப் பற்றி கவலைப்படாமல் வெள்ளரிக்காயை நீங்கள் எடுத்து அதை அரைத்து அந்த ஸ்டெயின்லெஸ் பாத்திரங்களில் தேய்த்து பின் கழுவி விடுங்கள். இப்போது அது புதிய பாத்திரம் போல் அது காட்சி தரும்.

குளிர்சாதனப் பெட்டியில் பல பொருட்கள் வைத்திருக்கும் போது ஒரு துர்வாடை ஏற்படும். அந்த வாடை ஏற்படாமல் தடுக்க நீங்கள் ஆரஞ்சு பழ தோலை ஒரு பவுலில் போட்டு வைக்கலாம். அப்படி வைக்கும் போது ஆரஞ்சு பழ தோல் வாடை தான் வருமே ஒழிய கெட்ட வாடை வராது.

உங்கள் வீட்டு பீங்கான் பாத்திரங்களை சுத்தப்படுத்த வெள்ளை வினிகரை பயன்படுத்திப்பாருங்கள். உங்களுக்கு கட்டாயம் அது ஈசியாக நல்ல பலனை கொடுக்கும்.மேலும் எளிதில் உங்கள் வீட்டு பீங்கான் பாத்திரங்கள் சுத்தமாகி புதிது போல் பள பளவென ஜொலிக்கும்.

--Advertisement--

நீங்கள் பாத்திரம் கழுவும் பகுதியில் விடாப்பிடியான அழுக்குகள் இருந்தால் அதை சரி செய்ய நீங்கள் எலுமிச்சம் பழம் கொண்டு சுத்தப்படுத்தி பாருங்கள். அந்த இடத்தில் இருக்கும் பாசிகள் நீங்கி புதிது போல் மாறிவிடும்.

இரும்பு பாத்திரங்களை பாதுகாக்க நீங்கள் உருளைக்கிழங்கை வெட்டி துருப்பிடித்த பாத்திரத்தின் பகுதியில் நீங்கள் தேய்பதின் மூலம் துரு நீங்கி புதிய இரும்பு பாத்திரம் போல இருக்கும்.

மேற்கூறிய இந்த திசை நீங்கள் ஃபாலோ செய்து பார்த்து உங்களுக்கு ஏற்படுகின்ற அனுபவங்களை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.