Entertainment News
என்னது… லாங் லீவ் இல் ஓய்வெடுக்கப் போகிறாரா நடிகை சமந்தா? விவரம் உள்ளே…!!
தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகைகளின் வரிசையில் இருக்கும் நடிகை சமந்தா தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டு சமீபத்தில் தான் விவாகரத்து பெற்றார்.
இதனை அடுத்து பல தரப்பிலிருந்தும் பல்வேறு கருத்துக்களும், வதந்திகளும் வெளிவந்த போதும் அவற்றை எல்லாம் பற்றி கவலைப்படாமல் திரைப்படத்தில் நடிப்பதை மட்டுமே கருத்தில் கொண்டு நடித்து வந்தார்.
அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான திரைப்படமான யசோதா ஐந்து மொழிகளில் வெளியானது. ரசிகர்களின் மத்தியில் இந்த திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றதோடு வசூலையும் வாரி குவித்தது. இதனை அடுத்து இவரது நடிப்பில் வெளிவர உள்ள படம் சாகுந்தலம் இதுவும் மிக விரைவில் வெளிவர உள்ளது. மேலும் அதிபர் விஜய தேவர கொண்டாவுடன் குஷி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
அண்மையில் இவருக்கு ஏதோ மர்ம நோய் இருக்கிறது என்று வைரலாக இணையத்தில் பல்வேறு கருத்துக்கள் வெளிவந்த போது அதற்கு முற்றுப்புள்ளி வைப்பது போல இவர் தான் மயோசிடிஸ் என்ற அரிய வகை தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறியிருக்கிறார்.
இதனை அடுத்து யசோதா படத்தின் டப்பிங் போதே இவர் எந்த நோய்க்கான சிகிச்சையை பெற தொடங்கினார். மேலும் தொடர்ந்து சிகிச்சைகள் பெற்று தேறி வந்தாலும் சரியாக படபிடிப்பு மற்றும் பிரமோஷனில் பங்கேற்க முடியாமல் திணறினார்.
தற்போது நோயின் தீவிரம் அதிகரித்ததை அடுத்து மருத்தவர்களின் ஆலோசனைப்படி, அதி உயர்ந்த சிகிச்சையை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் நடிகை சமந்தா இருக்கிறார். இதனை அடுத்து தென்கொரியா நாட்டிற்குச் செல்ல இவர் திட்டமிட்டு இருக்கிறார்.
எனவே நடிப்பதற்கு நேரம் கிடைக்காத நிலையில் அவர் நீண்ட கால ஓய்வை நடிப்புக்கு கொடுக்க திட்டமிட்டு உள்ளதாகவும் அது குறித்த அதிகாரப்பூர்வமான செய்திகள் விரைவில் வெளிவரும் என்று திரையுடக வட்டாரம் கூறி வருகிறது.
இதனை எடுத்து இவரது ரசிகர்கள் ஆழ்ந்த சோகத்தோடு இருப்பதோடு மட்டுமல்லாமல் அவர் விரைவில் குணம் பெற வேண்டும் என்று பிரார்த்தித்து வருகிறார்கள்.