Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

இறங்கி வந்த விவாகரத்து நடிகர்.. அவமானப்படுத்திய மனைவி.. இப்படி சொல்லி இருக்க கூடாது..!

actor

Entertainment News

இறங்கி வந்த விவாகரத்து நடிகர்.. அவமானப்படுத்திய மனைவி.. இப்படி சொல்லி இருக்க கூடாது..!

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக இருக்கும் இந்த நடிகர் தற்போது ஹாலிவுட் படங்களில் நடிக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளார். இளம் வயது முதலே சர்ச்சைகளுக்கும் சலசலப்பும் பஞ்சமில்லாத இந்த நடிகர் முன்னணி நடிகர் ஒருவரின் மகளை காதலித்து அவரையே திருமணம் செய்து கொண்டார்.

கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகள் எந்த தொந்தரவும் இல்லாமல் தன்னுடைய திருமண வாழ்க்கையைத் தொடர்ந்த இவர் சமீபத்தில் விவாகரத்து பெற்று தன்னுடைய காதல் மனைவியை பிரிந்தார்.

2 குழந்தைகளுக்கு தந்தையாக இருக்கும் நிலையில் தனது மனைவியை பிரியும் இப்படியான கடினமான முடிவை ஏன் எடுத்தார்..? என்று பலரும் குழம்பித் தவித்தனர்.

இருவரும் பிரிவதற்கு இதுதான் காரணம் என கண் காது மூக்கு வாய் உடல் என உருவாக்கி அதற்கு உயிர் கொடுத்து பல செய்திகளை எழுதித் தள்ளின மீடியாக்கள் .

அதையெல்லாம் எதிர்பார்த்த இருவரும் அவற்றைக் கண்டுகொள்ளாமல் அவரவர் பாதையில் தற்பொழுது பயணித்து வருகின்றனர். ஆனால் விவாகரத்துக்குப் பிறகு நடிகரின் சினிமா பயணம் என்பது தேய்ந்து கொண்டே வருகின்றது.

காரணம் விவாதத்திற்கு பிறகு வெளியான இவருடைய எந்த படமும், பாடலும் வெற்றி பெறவில்லை.  இதனால் மனம் இறங்கி வந்த நடிகர் தன்னுடைய மனைவியுடன் மீண்டும் இணைந்து வாழ விருப்பம் தெரிவித்து தனக்கு தெரிந்த நண்பர்கள் மூலம் தூது அனுப்பியதாக கூறப்படுகிறது.

ஆனால் எனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்த போது கூட என்னை அவர் வந்து பார்க்கவில்லை. தொலைபேசியில் கூட விசாரிக்கவில்லை. இதனால் அவர் மீது நான் பயங்கர கோபத்தில் இருக்கின்றேன்.

நான் உடல்நலம் சரியில்லாமல் இருக்கிறேன் என்று அவருக்கு நன்கு தெரியும் ஆனாலும் அப்போது கூட ஒரு மெசேஜ் கூட செய்யவில்லை. குழந்தைகளிடம் கூட என்னைப் பற்றி எதுவும் கேட்டதாக தெரியவில்லை.

இதனால் அவர் மீது எனக்கு கடுமையான கோபம் இருக்கின்றது. இனிமேல் அவருடன் சேர்ந்து வாழ எனக்கு விருப்பம் கிடையாது நான் இந்த வாழ்க்கைக்கு பழக்கப்பட்டு விட்டேன் என பதில் கொடுத்துள்ளார்.

இந்த பதிலைக் கேட்ட நடிகர் அதிர்ந்துபோய் செய்வதறியாமல் திகைத்து வருகின்றாராம்.

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

BiggBoss Tamil 6

Popular Articles

Top Rated

To Top