Entertainment News
கே.ஜி.எஃப்-பை ஓரம் கட்டுமா தங்கலான்..? – சாதிப்பாரா பா ரஞ்சித்..?
நடிகர் விக்ரம் நடிப்பில் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும் தங்கலாம் என்ற திரைப்படம் கே ஜி எஃப் ஐ அடிப்படையாகக் கொண்டது இந்த திரைப்படம் கேஜிஎப் சாதனையை முறியடிக்குமா..? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது.
தொடர்ந்து தோல்விப் படங்களைக் கொடுத்து வரும் நடிகர் சியான் விக்ரம் மற்றும் புரட்சி இயக்குனர் என்ற அரசியல் கட்சி கூட்டணியில் இந்த திரைப்படம் உருவாகி வருகிறது.
இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் ஏக போகமாக இருக்கிறது கேஜிஎப் நடந்த அதே கதை களத்தில் இந்த திரைப்படமும் நடக்க இருக்கிறது இன்னொரு பக்கம் என்று கூட கூறலாம்.
எனவே கேஜிஎஃப் படத்தின் வசூலை அல்லது சாதனையை இந்தப் படம் முறியடிக்குமா என்று கேள்வி ரசிகர்கள் மத்தியில் தற்போது இருக்கிறது. இந்த படத்தில் நடிகர்கள் விக்ரமுடன் பல நடிகர்கள் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்து வருகிறார்கள்.
மட்டுமில்லாமல் இந்த படத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நடிகர் விக்ரம் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி இருந்தது இதனை பார்க்கும் பொழுது படம் வேற லெவல் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்படுகிறது.
இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வாரா..? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.