Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

விளம்பரப் படங்களில் மற்ற நடிகர்களை போல ரஜினிகாந்த் நடிக்காதது ஏன்? காரணம் தெரியுமா?

actors

Entertainment News

விளம்பரப் படங்களில் மற்ற நடிகர்களை போல ரஜினிகாந்த் நடிக்காதது ஏன்? காரணம் தெரியுமா?

 தமிழ் திரை உலகம் உள்ளவரை என்றுமே சூப்பர் ஸ்டாராக நிலைத்திருந்து தனது புகழால் உயர்ந்திருக்கும் ரஜினிகாந்த் விளம்பர படங்களில் நடிப்பதே இல்லை என்பதை ஒரு பாலிஸியாகவே கொண்டிருக்கிறார்.

 இதற்கு என்ன காரணம் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டாமா? அதற்கான விடை என்ன என்பதை இனி காணலாம் வாருங்கள்.

actor

பொதுவாகவே சினிமா பிரபங்களுக்கு மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கை பயன்படுத்திக் கொண்டு பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்கள் அவர்கள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்வதற்கான விளம்பரங்களில் நடிக்க வைப்பார்கள். அதற்காக கோடி கணக்கான பணங்களையும் கொட்டித் தருவார்கள்.

 அந்த வரிசையில் சிறந்த விளையாட்டு வீரர்களாக திகழ்ந்த சச்சின், தோனி போன்றவர்கள் தொடங்கி ஷாருக் கான் சல்மான்கான் போன்ற முன்னணி பாலிவுட் நடிகர்கள் வரை இன்றளவும் ஏராளமான விளம்பரங்களில் நடித்து கோடிக்கணக்கான சம்பாத்தியத்தை பெற்று வருகிறார்கள்.

இதையும் படிங்க :  பீஸ்டை போல விஜய் வாரிசும் ஊத்திக் கொண்டதா..? உண்மையான ரிசல்ட் என்ன..?

rajini

இவர்களைப் போலவே தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் நடிக்கும் திரை உலகை சார்ந்த பிரபல முன்னணி நடிகர்களும் விளம்பர படங்களில் நடித்து அசத்தி வருகிறார்கள். ஆனால் அதிலிருந்து சற்று விலகி இருப்பவர்கள் தமிழ் சினிமா நட்சத்திரங்கள் என்று கூறலாம்.

 தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய், அஜித், சூர்யா, கமல் போன்ற நட்சத்திரங்கள் ஒரு சில விளம்பரங்களில் நடித்திருந்தாலும் தற்போது அவற்றின் நடிப்பதை சுத்தமாக நிறுத்தி விட்டார்கள்.

 ஆனால் தமிழ் திரை உலகின் சூப்பர் ஸ்டார் ஆக வலம் வரும் ரஜினிகாந்த் இதுவரை எந்த ஒரு விளம்பரத்திலும் நடித்ததே இல்லை ஆரம்பகட்டத்தில் பாம் கோலா என்ற குளிர்பான விளம்பரத்தில் மட்டும் நடித்திருந்தார்.

இதையும் படிங்க :  நடிகர் விக்ராந்த்-தின் அம்மா யாரு தெரியுமா..? - அட இவங்களா..ன்னு ஷாக் ஆகிடுவீங்க..!

jailer

 அது மட்டும் இல்லாமல் அரசின் விழிப்புணர்வு விளம்பரங்களில் நடித்திருக்கிறார். அதுவும் சம்பளம் வாங்காமல் என்பது கூடுதல் சிறப்பு. அந்த குளிர்பான விளம்பரத்தை தவிர்த்து இன்று வரை அவர் எந்த விளம்பரங்களின் மூலமும் சம்பாதித்தது இல்லை.

தன்னால் எந்த ஒரு விஷயமும் மக்களுக்கு தவறாக ப்ரொமோட் ஆகி விடக்கூடாது என்ற கருத்தை மையமாகக் கொண்டுதான் அவர் இதுபோன்ற விளம்பரங்களில் நடிப்பதில்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

Popular Articles

Tag Cloud :

Actress Samantha Actress Sneha Aishwarya Rajesh Amala Paul Andrea Jeremiah Anikha Surendran Anjali Kajal Aggarwal Keerthy Suresh Kiran Rathod Malavika Mohanan Nayanthara Nivetha Pethuraj Pooja Hegde Poonam Bajwa Priya Bhavani Shankar Priyanka Mohan Rachitha Mahalakshmi Rashmika Mandanna Reshma Pasupuleti Shivani Narayanan Tamanna Bhatia Tamil Cinema News Trisha Vani Bhojan Vijay ஆண்ட்ரியா ஐஸ்வர்யா ராஜேஷ் கிரண் கீர்த்தி சுரேஷ் சமந்தா சினிமா செய்திகள் சினேகா தமன்னா திரிஷா நயன்தாரா நிவேதா பெத்துராஜ் பிரியா பவானி ஷங்கர் பூஜா ஹெக்டே பூனம் பாஜ்வா மாளவிகா மோகனன் யாஷிகா ஆனந்த் ரச்சிதா மகாலட்சுமி ராஷ்மிகா மந்தனா வாணி போஜன் பவித்ரா லட்சுமி Pavithra Lakshmi

To Top