Entertainment News
சீரியல் நாயகி திவ்யா…!! பாக்கியலட்சுமி தொடரில் நடிப்பவர் செல்லம்மாவில் இருந்து விலகல்? காரணம் என்ன?
விஜய் டிவியில் டிஆர்பி ரேட்டை தக்க வைத்துக்கொள்ள உதவக்கூடிய தொடர் தான் பாக்கியலட்சுமி.இந்த தொடர் இல்லத்தரசிகள் விரும்பி பார்க்கக் கூடிய தொடர்களில் ஒன்று.
தற்போது இந்த சீரியல் கதையில் ராதிகா மற்றும் பாக்கியலட்சுமி தேர்தலில் போட்டியிட்டார்கள் அந்தத் தேர்தலில் பாக்யா அதிக அளவு ஓட்டுக்களை பெற்று ஜெயித்தார்.
இல்லத்தரசிகளின் மனதில் தற்போது பாக்கியலட்சுமி சீரியலானது அதிக அளவு பார்க்கப்படக்கூடிய சீரியல்களில் வரிசையில் இருப்பதோடு மட்டுமல்லாமல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் போன்ற சீரியல்களுக்கு டாப் காம்பெட்டிஷனை கொடுக்கக்கூடிய அளவு இருக்கும் சீரியல் தான் இந்த பாக்கியலட்சுமி சீரியல் ஆகும்.
மேலும் இந்தத் தொடரில் திவ்யா கணேஷ் என்பவர் ஜெனிபர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அது மட்டுமல்லாமல் இதே விஜய் டிவியில் செல்லமா என்ற தொடரில் மேகா என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருகிறார்.
இதனை அடுத்து பாக்கியலட்சுமி இல் தொடர்ந்து நடிப்பில் கலக்கி வரும் இவர் செல்லம்மா தொடரிலிருந்து விலகுவதாக தெரியவந்துள்ளது.
அடுத்து தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிய நேகாவாக ஸ்ரேயா என்பவர் நடிப்பார் என்ற புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்கள் மனதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார்.
இதற்கான காரணம் என்ன என்று தெரியாமல் ரசிகர்கள் அனைவரும் ஆழ்ந்த சோகத்தில் இருக்கிறார்கள். இனி மேகாவை பாக்கியலட்சுமி தொடரில் மட்டும் தான் மீட் பண்ண முடியும் என்று அவர்கள் கூறி வருகிறார்கள்.
மேலும் இந்த தொடரில் இருந்து விலகுவதற்கு உண்மையான காரணம் என்ன என்பதை அவர் பதிவு செய்தால் மட்டுமே தெரிய வரும் என்பதால் ரசிகர்கள் விரைவில் அவர் பதிவு செய்வார் என காத்திருக்கிறார்கள்.
இனி பாக்கியலட்சுமி தொடரில் மட்டும் திவ்யா கான்சென்ட்ரேசன் செய்வதால் நிச்சயமாக இந்த தொடர் கயல் தொடருக்கு விட அதிக அளவு பார்வையாளர்களால் பார்க்கப்படக்கூடிய ஒரு தொடராக மாறுமா என்ற கேள்வியை ரசிகர்களின் மத்தியில் வைத்துள்ளது.