Entertainment News
“தளபதி 66 தலைப்பு இது தான்…” – அப்போ சர்ச்சை வெடிக்கப்போவது 100% உறுதி..!
பீஸ்ட் படத்தின் தோல்விக்கு பிறகு நடிகர் விஜய் தற்போது இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி66 என்ற தற்காலிக பெயரில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளரான தயாரிக்கின்றார்.
இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளார். இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு என ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளில் உருவாகி வருகின்றது.
மேலும் நடிகர்கள் சரத்குமார் பிரபு பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். ஆக்ஷன் மற்றும் கமர்ஷியல் படங்களில் நடித்து வந்த நடிகர் விஜய் தற்போது குடும்பம் மற்றும் காதல் சம்பந்தப்பட்ட படத்தில் அப்பாவியான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். ஆக்சன் இவற்றை சற்று ஓரங்கட்டி வைத்துவிட்டு காவலன் படத்தில் நடிகர் விஜய் நடித்தது போல அமைதியான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
நடிகர் விஜயின் முதல் நேரடி தெலுங்கு திரைப்படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தனை நாட்களாக இவருடைய படங்கள் தான் இவருடைய படங்கள் தெலுங்கில் டப் ஆகி வெளியாகும். ஆனால் இந்தப் படம் நேரடியாக தெலுங்கில் உருவாகி வருகின்றது.
இந்த படம் குறித்து ஒரு தகவல் இணையத்தில் வெளியாகி வருகிறது அதன்படி நடிகர் விஜய்யின் பிறந்த நாளன்று படத்தின் பர்ஸ்ட் லுக்கும் தலைப்பையும் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் படத்தின் தலைப்பு குறித்தும் சில தகவல்கள் கசிந்துள்ளன.
அதன்படி இந்த படத்திற்கு “வாரசுடு” என்று பெயர் வைத்துள்ளதாக படகுழுவிற்கு நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. தயாரிப்பாளர் தெலுங்கு படங்களை தயாரிப்பவர் என்பதாலும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் படத்தின் பெயரை முதலில் தெலுங்கில் தான் வைத்துள்ளனர். அதன் பிறகுதான் இந்த தலைப்பை தமிழுக்கு மாற்றியுள்ளனர்.
அதன்படி தமிழில் “வாரிசு” என்ற தலைப்பில் தளபதி 66 படம் வெளியாகும் என கூறப்படுகிறது. வாரிசு என்ற வார்த்தையில் இருக்கக்கூடிய சர்ச்சைகளையும் தொந்தரவுகளையும் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்ற அவசியம் கிடையாது.
ஏற்கனவே தன்னுடைய அப்பாவால் தான் நடிகர் விஜய் இந்தளவுக்கு உயர்ந்துள்ளார் என்ற பேச்சுக்கள் இருக்கின்ற நிலையில் இப்படியான தலைப்பு என தலைப்பில் நடிகர் விஜயின் படம் வெளியாவது பொருத்தமானதாக இருக்குமா..? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமில்லாமல் தமிழ்நாட்டில் சினிமா, அரசியல் வட்டத்தில் வாரிசு என்றாலே அதன் பிறகு பல சர்ச்சைகள் இருக்கத்தான் செய்கிறது. எனவே, நடிகர் விஜய் விவகாரத்தில் சற்று நிதானமாக முடிவு எடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆனால் தெலுங்கு படத்தின் ஆனால் தயாரிப்பாளர் தில் ராஜூ படத்தின் தலைப்பில் மாற்றம் கொண்டு வருவது படத்தின் கதைக்கு சரியானதாக இருக்காது என்பதில் விடாப்பிடியாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த படத்தில் நடிகர் மகேஷ்பாபு சிறப்பு தோற்றத்தில் சில காட்சிகளில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு மகேஷ்பாபுவின் நெருங்கிய நண்பர் என்பதால் மகேஷ்பாபு இதற்கு ஒப்புக்கொண்டிருக்கிறார். தெலுங்கு மார்க்கெட்டை குறி வைத்து தயாரிப்பாளர் இப்படி ஒரு நகர்வை எடுத்துள்ளார் என கூரபடுகின்றது.
