Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

தொக்காக சிக்கிய பிரபல தொகுப்பாளினி..! – நைட் பார்ட்டியில் அரைகுறை ஆடையுடன் தப்பி ஓட்டம்..!

anchor

Entertainment News

தொக்காக சிக்கிய பிரபல தொகுப்பாளினி..! – நைட் பார்ட்டியில் அரைகுறை ஆடையுடன் தப்பி ஓட்டம்..!

சின்னத்திரையில் தொகுப்பாளினியாக இருந்து தற்போது நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் இந்த குச்சி நடிகை படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

படப்பிடிப்பு முடிந்ததும் அப்படத்தில் பணியாற்றிய ஹீரோக்கள் மற்றும் துணை நடிகர்களுடன் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ரிசார்ட்டுக்கு சென்று விடுவது வழக்கமாக கொண்டுள்ளார்.

35 வயதுக்கு மேல் ஆகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் இந்த தொகுப்பாளினி சுதந்திர பறவையாக ஊர் சுற்றுவதை விரும்புகின்றார். இவர் குறித்து பல்வேறு கிசுகிசுக்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வருவது வழக்கம்.

ஆனால் தற்பொழுது தன்னுடைய சக நண்பர்களால் பிரபல தனியார் ரிசார்ட் ஒன்றில் இரவு பார்ட்டியின் போது தன்னுடைய சக நண்பர்களால் பாலியல் சீண்டலுக்கு உள்ளாகியுள்ளார்.

இத்தனை நாட்களாக சுதந்திர பறவையாக ஊர் சுற்றித் திரிந்த இவர் தன்னுடைய நண்பர்கள் என்னிடம் இப்படி நடந்து கொள்வார்கள் என்று நினைத்திருக்க மாட்டார்.

கடந்த 18ஆம் தேதி இரவு நைட் பார்ட்டிக்கு சென்ற இவர் மூக்கு முட்ட குடித்துவிட்டு போதையில் திளைத்த பொழுது அவருடைய நண்பர்கள் இவரை வழக்கத்திற்கு மாறாக எதோ ஒரு நோக்கத்துடன் சீண்டுவதை அவதானித்துள்ளார்.

அதனை தொடர்ந்து, அங்கிருந்து தப்பித்தால் போதும் என வெறும் துண்டை கட்டிக்கொண்டு.. போதையில் தலைதெறிக்க ஓடி வந்து தன்னுடைய காரில் ஏறி சிட்டாக பறந்துள்ளார்.

இந்த விவகாரம் சின்னத்திரை வட்டாரங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் கடந்த 18ஆம் தேதி நடந்த அந்த பார்ட்டி பிரபல அரசியல்வாதி மகன் ஒருவரால் ஏற்பாடு செய்யப்பட்டது.

ஏற்கனவே திரைத்துறை வட்டாரத்தில் அவர் மீது அடுக்கடுக்கான புகார்கள் இருக்கிறது. சரியான நேரத்தில் தொகுப்பாளினி அங்கிருந்து எஸ்கேப் ஆகிவிட்டார் இல்லை என்றால் அவருடைய மன நிம்மதி கெட்டு இருக்கும்.

மோசமான நபர்கள் என்று பலமுறை கூறியும் அவர்களுடன் சொகுசாக சுற்றி திரிந்து வந்தார். தற்போது அவர்களின் உண்மை முகத்தை பற்றி நன்கு புரிந்து கொண்டிருப்பார் என்று நமட்டு சிரிப்பு சிரிக்கிறார்கள் விவரமறிந்த வட்டாரங்கள்.

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

BiggBoss Tamil 6

Popular Articles

Top Rated

To Top