“உங்க பார்வை திறன் அதிகரிக்கணுமா..!” – அதுக்கு சிம்பிளான இந்த யோகா போதும்..!

யோகா கலையின் மூலம் எண்ணற்ற நன்மைகள் நமக்கு கிடைக்கிறது. மன அழுத்தத்தை குறைத்து மன நிம்மதியை அளிக்கக்கூடிய இந்த யோகா கலையை யோகிகள் நமக்கு விட்டுச் சென்று இருக்கிறார்கள். அப்படிப்பட்ட யோகாவை நீங்கள் செய்வதின் மூலம் உங்கள் கண் பார்வை திறனை அதிகரித்துக் கொள்ள முடியும்.

மேலும் இந்தப் பார்வை திறனை அதிகரிக்க கூடிய யோகா என்னென்ன அதை எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

கண் பார்வை திறனை அதிகரிக்க கூடிய யோகா

இன்று இருக்கும் இளம் தலைமுறை அதிக அளவில் லேப்டாப் மற்றும் தொலைபேசிகளை பயன்படுத்தி வருகிறார்கள். இதன் மூலம் இவர்களின் கண் பயன்பாடு அதிகரித்து இருப்பதால் கண் சம்பந்தப்பட்ட வியாதிகளும் பெருகி உள்ளது. எனவே உங்கள் கண் பார்வையை அதிகரிக்க எளிமையான சில யோகாக்களை செய்யலாம்.

அந்த வகையில் உற்று நோக்குதல் எனும் பயிற்சியை நீங்கள் செய்வதின் மூலம் உங்கள் பார்வை திறன் அதிகரித்து ஒரு பொருளை குறிப்பிட்டு நோக்கக்கூடிய சக்தி அதிகரிக்கும்.

உங்கள் கண்களை நேராகவும் கீழாகவும் அசைத்தல் மூலம் கண்களின் இயக்கம் மேம்படும். இந்த பயிற்சியை காலை நேரங்களில் நீங்கள் மேற்கொள்ளலாம்.

---- Advertisement ----

பாஸ்திரிகா எனும் பிராணயாம பயிற்சியை நீங்கள் தினமும் மேற்கொள்ளுங்கள் இதற்காக முதலில் உங்களது கழுத்து மற்றும் முதுகு எலும்பை நேராக வைத்துக்கொண்டு சம்மணங்கால் போட்டு உடலை அசைக்காமல் மூச்சினை எடுக்க வேண்டும். பின்னர் நாசிகளின் வழியாகவும் மூச்சை விட்டால் போதுமானது. இதன் மூலம் உங்களுக்கு எண்ணற்ற நன்மை கிடைக்கும்.

பத்து வினாடிக்கு ஒருமுறை கண் சிமிட்டுங்கள். இதன் மூலம் உங்கள் கண்கள் சிறப்பாக மாறும். உள்ளங்கைகளால் சில நிமிடங்கள் உங்கள் கண்களை மூடி விட்டு திறக்கவும். மேலும் உங்கள் உள்ளங்கையை கொண்டு கைகளில் சூடேற்றி கண்களை ஒத்தி எடுக்கவும். இதன் மூலம் உங்கள் கண்கள் பாதுகாப்பாக இருக்கும்.

கண்களை இருபுறமும் நகர்த்துதல், சர்வங்காசனம் செய்தல் மூலம் உங்கள் கண்களின் பார்வை திறனை அதிகரித்துக் கொள்ளலாம்.மேலும் சிறிது நேரம் கண்களுக்கு ஓய்வு கொடுப்பதும் மிகவும் முக்கியம். இரவு உறங்கும் முன் ஒரு மணி நேரமாவது நீங்கள் உங்கள் மின்னணு சாதனங்களை பயன்படுத்தாமல் இருங்கள்.

மேற்கூறிய வழிமுறைகளை நீங்கள் பின்பற்றி வந்தால் கட்டாயம் உங்கள் கண் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.

---- Advertisement ----