கண்பார்வை குறைபாட்டை சரிசெய்யும் திருவாரூர்தூவாய்நாதர் கோயில்

ஒரு முறை சுந்தரர் தனது இரண்டாவது துணைவியான சங்கிலி நாச்சியாரிடம், ”நான் எப்போதும் உன்னை விட்டு பிரியமாட்டேன்” என்று உறுதி மொழி கொடுத்தார்.

திடீரென அவருக்கு முதல் துணைவியான பரவை நாச்சியார் நினைவுக்கு வந்தவுடன் திருவாரூர் புறப்படுகிறார். பரவை நாச்சியாருக்கு செய்து கொடுத்த உறுதி மொழியை மீறியதால் சுந்தரரின் பார்வை பறிபோனது. மனம் கலங்கிய சுந்தரர் பார்வை வேண்டி ஒவ்வொரு சிவத்தலங்களாக சென்று, மீண்டும் பார்வை தந்தருளும்படி வேண்டினார். காஞ்சிபுரம் வந்தபோது காமாட்சியின் கருணையால் ஏகாம்பரேஸ்வரர் சுந்தரருக்கு இடது கண் பார்வை மட்டும் தந்தருளினார். மீண்டும் அவர் பல சிவத்தலங்களை தரிசித்து திருவாரூர் வந்து மற்றொரு கண்ணுக்கு பார்வை தந்தருளும்படி வேண்டினார். இவரது வேண்டுதலை ஏற்ற இறைவன், “இத்தலத்தில் அக்னி மூலையில் உள்ள குளத்தில் நீராடி தன்னை வணங்கினால் வலது கண் பார்வை கிடைக்கும்” என்றருளினார். சுந்தரரும் அதன்படி செய்து வலது கண் பார்வை பெற்றார்.

ஆலய அமைப்பு 

மூன்று நிலை  ராஜகோபுரத்துடன் கிழக்கு நோக்கி அமைந்த ஆலயம். ராஜகோபுரத்தை அடுத்து பலிபீடம், நந்திமண்டபம் உள்ளது. மூலவர் சுயம்பு லிங்கமாக கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். சுந்தரருக்கு இங்கு கண் கிடைத்ததன் அடையாளமாக, இத்தலத்து இறைவனுக்கு அபிஷேகம் செய்யும்போது அவரது திருமேனியில் கண் தடம் தெரிவதை காணலாம்.    கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர்.

தாயார் தனி சன்னதியில் தெற்கு நோக்கி  நின்ற கோலத்தில் அருள்புரிகிறாள். சன்னதியின் இரு புறமும் துவாரபாலகிகளின் ஓவியங்கள் உள்ளன. இத்தல விநாயகர் சித்தி விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.

விநாயகர் சந்நிதியில் துர்வாசருக்கும் ஒரு உருவச்சிலை உள்ளது. ஒரு காலத்தில் இவர் மிகவும் உக்கிரகமாக இருந்ததால் ஆலயத்திறகு வருபவர்கள் துர்வாசர் உருவச்சிலை இருக்கும் விநாயகர் சந்நிதியை தவிர்த்து கோவில் வலம் வந்தனர். இந்த உக்கிரகத்தைக் குறைக்க துர்வாசர் சிலையிலுள்ள வலது கை கட்டைவரலை பின்னப்படுத்தியதாகவும், அதன்பின் மக்கள் பயமின்றி ஆலயத்தை வலம் வருவதாகவும் கூறுகிறார்கள்.

விநாயகர், முருகன் சன்னதிகளும் உள்ளது. 

சனிபகவான் தெற்கு பார்த்து அனுக்கிரக மூர்த்தியாக தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்.

கோயிலின் அக்னி மூலையில் தீர்த்த குளம் அமைந்துள்ளது.

 

 ஆலய முகவரி

அருள்மிகு தூவாய் நாதர் திருக்கோயில்,  கீழ வீதி, 

திருவாரூர் அஞ்சல்,

திருவாரூர் மாவட்டம்,

 610 001. 

 தினமும் காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8  மணி வரையிலும் திறந்திருக்கும்.

---- Advertisement ----

Check Also

சூரியாவை விட பலகோடி சொத்துக்கு சொந்தக்காரி.. மும்பையில் மட்டும் எத்தனை கோடி தெரியுமா..?

90களில் கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தவர் நடிகை ஜோதிகா. வட இந்தியாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வாய்ப்பு …