Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

அது உன்கிட்ட இல்ல.. ஆளை விடுப்பா சாமி.. விஜய் மகனை பார்த்து தெறித்து ஓடும் நடிகர்கள்..

மிகப்பெரிய நட்சத்திர வாரிசு வீட்டு குடும்பத்தில் இருந்து பிறந்து வளரும் சிறுசுகள் அவர்கள் மூலமாகவே மிகச் சுலபமாக சினிமாவில் நுழைந்து அவர்களின் அடையாளத்தை வைத்து மிகப்பெரிய பிம்பத்தை பெற்று விடலாம் என்ற கனவோடு நுழைகிறார்கள்.

ஆனால் அது சில பேருக்கு ஒர்க் அவுட் ஆகிறது. திறமை இல்லாத வாரிசுகள் அறிமுகமான புதிதிலே ஆள் அடையாளமே இல்லாமல் போய்விடுகிறார்கள்.

வாரிசுகளின் படையெடுப்பு:

அப்படித்தான் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் வெளிநாட்டில் சென்று ஃபிலிம் மேக்கிங் படிப்பை படித்துவிட்டு திரைப்படத்தை இயக்க ஆர்வம் காட்டி வந்தார்.

அரமபத்தில் குறும்படங்களை இயக்கி வந்த அவர் லைக்கா நிறுவனம் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்க அதிகாரப்பூர்வமாக அவர்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார்.

--Advertisement--

ஜல மாதங்களுக்கு முன்னர் நடந்த இச்சம்பவம் புகைப்படங்களாக வெளியாகி ” இயக்குனராக அறிமுகமாகும் விஜய் மகன்” என தலைப்பு செய்திகள் வெளியானது.

இது கோலிவுட் சினிமாவில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. ஆனால் இந்த ஒப்பந்தம் ஆரம்பித்து கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேலாகியும் இதுவரை அந்த படத்திற்கான அப்டேட் எதுவுமே வெளியாகவில்லை.

இதனால் அந்த படம் என்ன ஆனது? விஜய் மகன் சஞ்சய் என்ன செய்து கொண்டிருக்கிறார்?என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.

விஜய் மகன் இயக்குனர் அவதாரம்:

இந்நிலையில் தற்ப்போது இந்தப் படம் அப்படியே நின்று போனதற்கு என்ன காரணம்? என்பது குறித்து தற்போது ஒரு தகவல் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது.

விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கப்போகும் போகும் திரைப்படத்தில் பிரபல நடிகரான விஜய் சேதுபதி வில்லனாகவும், ஹீரோவாக விக்ரம் மகன் துருவ்வையும் வைத்து படமெடுக்க முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியது.

இதற்காக ஸ்க்ரிப்டை அவர்களிடம் கொண்டு போய் கூறி இருக்கிறார் சஞ்சய். ஆனால் விஜய் சேதுபதி மற்றும் துருவ் விக்ரம் உள்ளிட்டோர் அவரின் கதையில் சில விளக்கம் கேட்டபோது அதற்கு விளக்கம் கொடுக்க முடியாமல் திணறி இருக்கிறார் ஜேசன் சஞ்சய்.

இதனால் அனுபவம் இல்லாத புது முக இயக்குனருடன் நடிப்பதே வேஸ்ட் என புரிந்து கொண்ட விஜய் சேதுபதி உள்ளிட்டோர் எஸ்கேப் ஆகிவிட்டதாக தகவல்கள் கூறுகிறது.

மேலும் துருவ் விக்ரம் இந்த படத்தில் நடிக்க முடியாது என கூறிவிட்டதால் அதையடுத்து துல்கர் சல்மான் ஹீரோவாக வைத்து படம் எடுக்க முயற்சித்தார் சஞ்சய் .

கதை விளக்க தெரியாமல் திணறிய சஞ்சய்:

ஆனால் அவருக்கும் ஜேசன் சஞ்சய்யின் கதையில் ஈடுபாடு இல்லாமல் அவரும் விலகி விட்டதாக கூறப்படுகிறது.

இந்த பேச்சு வார்த்தை அப்படியே நின்று போனதாம். இதனால் தற்போது அடுத்ததாக அதிதி சங்கரின் மகளான அதிதியை ஹீரோயின் ஆக வைத்து இந்த படத்தை எடுக்கலாம் என்று முடிவு செய்துள்ளாராம் சஞ்சய்.

பிரபல இசை அமைப்பாளர் ஆன ஏ ஆர் ரகுமான் மகனான அமீனை இசையமைப்பாளராக போட்டுக் கொள்ளலாம் என்றும் அவர் முடிவு செய்து இருக்கிறாராம்.

ஆனாலும் கூட ஜேசன் சஞ்சயின் இறக்கத்தில் நடிக்க எந்த ஒரு முன்னணி நடிகர்களும் ஆர்வம் காட்டவில்லை. மாறாக அவர்கள் தெரிந்து ஓடுகிறார்கள் என்று தான் தகவல்கள் கூறுகிறது.

எஸ்கேஎப் ஆகிய விஜய் சேதுபதி:

திறமையும் முழுமையாக இல்லை என்பதை புரிந்து கொண்ட பெரிய நட்சத்திர நடிகர்கள் விஜய் மகன் இயக்கத்தில் நடிக்க முடியாது எனக் கூற முடியாமல் அப்படியே கமுக்கமாக எஸ்கேப் ஆகிவிடுகிறார்களாம்.

இப்படி ஒரு இக்கட்டான சூழலில் விஜய் கூட மகனுக்கு சப்போர்ட் செய்யவில்லை என செய்திகள் கூறுகிறது.

காரணம் சஞ்சய் இவ்வளவு சிறு வயதிலே அனுபவமில்லாமல் படம் இயக்குவது விஜய்க்கு சுத்தமாக பிடிக்கவே இல்லையாம்.

இதனை விஜய் ஆரம்பத்திலே மகன் சஞ்சயிடம் கூறினாராம். ஆனால், அப்பா பேச்சை கேட்காமல் லைக்கா நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டதாக கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில் எல்லோரும் படங்களில் நடிக்க முடியாது என்ற நழுவி சென்றதால் ஜேசன் சஞ்சய்க்கு என்ன செய்வதே என்றே தெரியாமல் இந்த படம் டேக் ஆப் ஆகாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.

அத்தோடு லைக்கா நிறுவனம் இப்போது கடுமையான நிதி நெருக்கடியில் இருப்பதால் கண்டிப்பாக இந்த படம் இப்போதைக்கு எடுக்க வாய்ப்பே இல்லை என கூறுகிறது சினிமா வட்டாரம்.

Continue Reading
 

More in Tamil Cinema News

Trending Now

To Top