எம்புட்டு கொழுப்பு இருக்கணும்.. இயக்குனரின் கௌதம் கார்த்திக் காட்டிய தெனாவெட்டு.. விளாசும் பிரபலம்..!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்கள் சினிமாவில் ஜெயித்து அரசியல் கட்சி துவங்கும் அளவிற்கு பெரிதாக வளர்ச்சியை கண்டு இருக்கின்றனர். ஆனால் பல நடிகர்களின் வாரிசுகள் சில படங்களில் நடித்த உடனே வரவேற்பை இழக்கின்றனர்.

அடுத்து பெயர் சொல்லும் அளவுக்கு கூட திரைப்படங்கள் எதுவும் வராமல் தள்ளாடிக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில்  80களில் பிரபல நடிகராக இருந்து வந்த நவரச நாயகன் கார்த்திக் மகன் கெளதம் கார்த்திக் தமிழ் சினிமாவில் முக்கியமான வாரிசு நடிகராவார்.

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான கடல் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார் கௌதம் கார்த்திக். இந்த படம் வெளியாகி கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் இதுவரை கௌதம் கார்த்திக்கு சொல்லிக் கொள்ளும்படி வெற்றி படம் ஒன்று கூட அமையவில்லை.

வரிசையாக தோல்வி:

குறிப்பாக அவர் நடித்த முதல் திரைப்படமான கடல் திரைப்படமே தோல்வி படமாகதான் அமைந்திருந்தது. இது ஒரு பக்கம் இருக்க தற்போது கௌதம் கார்த்திக் குறித்து பிரபல சினிமா பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு அவர்கள் தன்னுடைய யூடியூப் வீடியோ ஒன்றில் முக்கியமான தகவல் ஒன்றை பகிர்ந்து இருந்தார்.

இதனை கேட்ட ரசிகர்கள் கௌதம் கார்த்திக்கிற்க்கு எம்புட்டு கொழுப்பு இருக்கணும் என்று கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அதில் செய்யாறு பாலு கூறும் பொழுது லாக் டவுன் சமயங்களில் கௌதம் கார்த்திக் ஒரு திரைப்படத்தில் கதாநாயகனாக நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்திருக்கிறார்.

சில நாட்கள் அந்த திரைப்படத்தின் படப்பிடிப்பும் நடந்திருக்கிறது. அதற்கு பிறகுதான் கொரோனா காரணமாக லாக் டவுன் அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தமிழ் சினிமா முழுவதுமே படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டன.

உடல் எடை பிரச்சனை:

அந்த நேரத்தில் கௌதம் கார்த்திக் உடல் எடை சற்று அதிகமாகி இருக்கிறது அதற்கு பிறகு மீண்டும் படப்பிடிப்பு துவங்கப்பட இருந்தபோது கௌதம் கார்த்திகை பார்த்த அந்த இயக்குனர் அதிர்ச்சியாகி இருக்கிறார். இதனால் படத்தில் கண்டின்யுனுவிட்டியே இல்லாமல் போய்விடும் எனவே தயவு செய்து உடல் எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று இயக்குனர் கௌதம் கார்த்திக்கிடம் கூறியிருக்கிறார்.

ஆனால் இது கௌதம் கார்த்திக்கிற்கு கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது இதனால் கௌதம் கார்த்திக் படத்தில் இருந்து விலகிவிடும் அளவுக்கு இயக்குனரிடம் தெனாவட்டாக நடந்து கொண்டிருக்கிறார். அதன் பிறகு படக்குழுவினர் இயக்குனரை சமாதானப்படுத்தி கௌதம் கார்த்திக்கிடம் சென்று அவரிடம் மன்னிப்பு கேட்க சொல்லி இருக்கின்றனர்.

அதன் பிறகு இயக்குனர் மன்னிப்பு கேட்ட பிறகுதான் கௌதம் கார்த்திக் அந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார்  என்று இது குறித்து பேசி இருக்கிறார் பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு.

ரசிகர்கள் அதிருப்தி:

இதனை கேட்டு ரசிகர்கள் கௌதம் கார்த்திக்கிற்கு இவ்வளவு தெனாவட்டு இருக்க கூடாது என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். சினிமாவில் எவ்வளவு பெரிய உயரத்திற்கு போனாலும் இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் ஆகிய இருவரும்தான் ஒரு நடிகரின் பிரம்மாக்கள் என்று கூறலாம்.

அவர்கள் ஒரு நல்ல கதையை தேர்ந்தெடுத்து படமாக்கினால்தான் அதன் மூலம் கதாநாயகர்கள் பெரிதாக வளர முடியும். அப்படி இருக்கும் பொழுது அவர்களுக்குதான் திரைத்துறையிலேயே அதிக மரியாதை கொடுக்க வேண்டும்.

எந்த அளவிற்கு அவர்களிடம் பணிவுடன் நடந்து கொள்கிறார்களோ அந்த அளவிற்கு நடிகர்கள் சினிமாவில் பெரிய உயரத்தை தொட முடியும். இன்று முன்னணி நடிகர்களாக பார்க்கப்படும் பெரிய நடிகர்களான சிவாஜி கணேசன், எம்ஜிஆரில் துவங்கி பல நடிகர்கள் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு பெரும் மரியாதை கொடுத்தவர்கள் தான்.

தற்போது இருக்கும் நடிகர் ரஜினி நடிகர் விஜய் போன்றவர்கள் கூட இயக்குனர் தயாரிப்பாளர்களிடம் மிகவும் பணிவாக நடந்து கொள்வார்கள். ஆனால் வளர்ந்து வரக்கூடிய ஒரு நடிகராக இருந்து கொண்டு கௌதம் கார்த்திக் இவ்வளவு மோசமாக நடந்து கொண்டதுதான் அவருடைய வீழ்ச்சிக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

---- Advertisement ----

Check Also

இது தான் என்னோட கடைசி படம்ன்னு பில்டப் பண்ணுங்க.. மண்டை மேல இருக்க கொண்டையை மறந்த மாஸ் நடிகர்..!

சினிமாவில் திரைபடங்களை வெற்றி பெற செய்வதற்கு ஏகப்பட்ட விஷயங்களை படப்பிடிப்பு குழுக்கள் செய்து வருவதுண்டு. சில படங்களுக்கு அவர்களே புரளியை …