“ஊம் சொல்றியா மாமா… ஊம்.. ஊம்.. சொல்றியா மாமா..” – பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை வெறித்தனமான வீடியோ..!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல பிரபலமான சீரியல்களில் பாரதி கண்ணம்மா சீரியல் வில்லி Farina Azad. பாரதி கண்ணம்மா சீரியல் டிஆர்பி-யில் முன்னிலை வகித்து வருகிறது. இந்த சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் வினுஷா தேவியும், பாரதி கதாபாத்திரத்தில் அருண் பிரசாத் மற்றும் வெண்பா கதாபாத்திரத்தில் ஃபரீனாவும் நடித்து வருகின்றனர்.

இந்த கதையில் கண்ணம்மாவுக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறதோ அதே அளவுக்கு வெண்பா கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கிறது. அதிலும் வெண்பாவின் வில்லத்தனமான நடிப்பு அனைவரையும் வியக்க வைக்கும் அளவுக்கு இருக்கும்.

இதற்கு முன் இவர் சில சீரியல்கள் நடித்தாலும் பாரதி கண்ணம்மா தான் பெரிய ரீச் கொடுத்தது என்றே கூறலாம். இந்த சீரியலில் பாரதியை எப்படியாவது திருமணம் செய்தே தீரவேண்டும் என்ற ஆசையில், பாரதிக்கும் கண்ணம்மாவுக்கும் இடையே களங்கத்தை மூட்டி விடுவதில் இருந்து அதற்கு இடையூறாக யார் வந்தாலும் அதை தடுப்பது வரை அனைத்து வேலைகளையும் பார்க்கும் கொடூர கதாபாத்திரத்தில் செம்மையாக தனது நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

இதனிடையே ஃபரீனா கர்ப்பமாக இருக்கும் தகவலை வெளியிட்டிருந்தார். கர்ப்பமாக இருப்பதால் பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து ஃபரீனா விலகுவதாக வதந்திகள் வெளிவந்தது.

இதற்கு பதிலளித்த ஃபரீனா, நான் தற்போது சீரியலில் இருந்து விலகும் முடிவில் இல்லை, எனக்கு நடிப்பதில் தற்போதும் எவ்வித பிரச்னையும் இல்லை என விளக்கம் அளித்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

மேலும் கர்ப்பமாக இருந்தபோதும் சீரியலில் தொடர்ந்து நடித்து வந்த நிலையில் நவம்பர் 16ம் தேதி தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக இன்ஸ்டாவில் அறிவித்தார். இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஃபரீனா, போட்டோஷூட் புகைப்படங்கள் எடுத்து தனது பேஜில் அவ்வப்போது ஷேர் செய்து வருகிறார்.

அதன்படி தற்போது புஷ்பா படத்தில் இடம் பெற்ற ஊம் சொல்றியா மாமா… ஊம்.. ஊம்.. சொல்றியா மாமா.. என்ற ஐட்டம் பாடலுக்கு குலுங்க குலுங்க ஆட்டம் போட்டுள்ள வீடியோ ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

---- Advertisement ----

Check Also

உனக்கு இன்னொரு புருஷன் வேணும்ன்னு சொன்னப்போ மீனா கொடுத்த பதில்..! ரகசியம் உடைத்த பிரபலம்..!

தமிழ் சினிமாவில் வெகு வருடங்களாக முக்கியமான கதாநாயகியாக இருந்து வருபவர் நடிகை மீனா. தனது தனிப்பட்ட நடிப்பின் காரணமாகவே தொடர்ந்து …