“அழகுக் கலையில் அத்திப்பழம்..!” – அடடா இத்தனை நாள் தெரியாமல் போச்சே..!

அத்திப்பழம் சிவப்பா என் அத்தை மகள் சிவப்பா என்ற பாடல் வரிகளை நீங்கள் கேட்டிருப்பீர்கள். சிவப்பு நிறத்தில் இருக்கக்கூடிய இந்த அத்திப்பழம் உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதோடு மட்டுமல்லாமல் இதில் இருக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கான மினரல்ஸ், ஃபைபர், விட்டமின் போன்றவை அனைத்துமே உங்கள் சருமத்தை பராமரிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது.

அத்திப்பழம் பிரஸ்சாக இருந்தாலும் சரி, உலர்ந்த நிலையில் இருந்தாலும் சரி, உடலுக்கு பலவிதமான நன்மைகளை கொடுக்கிறது. அந்த அத்திப்பழத்தின் மூலம் நீங்கள் உங்கள் முக அழகை அதிகரித்துக் கொள்ளலாம்.

அத்திப்பழத்தை வைத்து எப்படி உங்கள் முக அழகை மேம்படுத்திக் கொள்வது என்பதை பற்றி விரிவாக இந்த கட்டுரையில் பார்ப்போம்.

அத்தி பழத்தால் ஏற்படும் சிவப்பழகு

அத்திப்பழம் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளை நீக்கக்கூடிய தன்மை கொண்டது. இந்தப் பழம் எந்த நிலையில் இருந்தாலும் அதனோடு ஒரு டீஸ்பூன் அளவு தேனை சேர்த்து நன்கு மைய அரைத்து இந்த கலவையை உங்கள் முகத்தை பூசி குறைந்தது அரை மணி நேரம் அப்படியே விட்டுவிடுங்கள்.

 இது உலர்ந்த பிறகு நீங்கள் உங்கள் முகத்தை குளிர்ந்த நீரைக் கொண்டு கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து வாரத்திற்கு நான்கு முறை செய்து வருவதன் மூலம் உங்கள் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்கிவிடும்.

---- Advertisement ----

மேலும் உங்கள் முகம் முகப்பரு தொல்லை இல்லாமல் பளிச்சென்று வெண்மையாக காட்சி அடிக்க இந்த அத்திப்பழ த்தோடு நீங்கள் சிறிது அளவு எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசி விட்டு கால் மணி நேரம் கழித்து முகத்தை கழுவினால் போதுமானது. உங்கள் முகம் பார்ப்பதற்கு பளபளப்பாக மாறிவிடும்.

மேலும் அதிக அளவு வைட்டமின் சி நிறைந்து இருக்கக்கூடிய இந்த அத்திப்பழத்ததை நீங்கள் பேஸ் பேக்காக பயன்படுத்தலாம். இதற்காக அத்திப்பழ விழுதுடன் நீங்கள் சிறிதளவு தேன் மற்றும் தயிர் நீர் சேர்த்து மூன்றையும் நன்கு கலந்து உங்கள் முகத்தில் அப்ளை செய்து விடுங்கள். இதன் மூலம் உங்கள் முகம் பொலிவாகவும் பார்ப்பதற்கு லட்சணமாகவும் மாறிவிடும்.

தலைமுடி வளர்ச்சிக்கு ஊக்கத்தை தரக்கூடிய இந்த அத்திப்பழம் தலைமுடி உதிர்வை குறைக்க கூடிய ஆற்றல் கொண்டது. எனவே மேற்கூறிய குறிப்புகளை பயன்படுத்தி உங்கள் முகத்தோற்றத்தை மேலும் அழகாக அத்திப்பழத்தை பயன்படுத்துங்கள்.

---- Advertisement ----