“அப்படி சொல்லுங்க இனி தனியார் பள்ளியில் இலவச கல்வி..!” – தமிழக அரசு உத்தரவு..!

தனியார் பள்ளியில் படிக்க வைக்க வேண்டும் என்ற கனவு ஏழை பெற்றோர்களுக்கும் உள்ளது. இந்த கனவு இதுவரை அவர்களுக்கு கானல் நீராக இருந்து வந்தது. அதையெல்லாம் தகர்த்து எறிய கூடிய வகையில் தமிழக அரசு ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவின் மூலம் இனி மேல் தனியார் பள்ளிகளும் ஒரு குறிப்பிட்ட சதவீத மாணவர்களுக்கு இலவச கட்டாய கல்வியை கொடுக்க வேண்டும் என்ற நிலைக்கு வந்துள்ளது. இதற்கு காரணம் தமிழக அரசு வெளியிட்டு இருக்கக்கூடிய அறிவிப்பு தான்.

Free education

ஆறு முதல் 14 வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்குமே இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் தமிழக அரசு மூலம் கொண்டுவரப்பட உள்ளது. இந்த திட்டமானது அரசியல் அமைப்புச் சட்டம் 21 A ன் கீழ் அமைய உள்ளது. இந்த சட்டப்படி ஒவ்வொரு குழந்தையும் பள்ளியில் நிறைவான தரமான முழு நேர கல்வி வழங்க வேண்டும் என்ற விதி வகுக்கப்பட்டுள்ளது.

எனவே அரசு பள்ளிகளில் மட்டும் இலவச கல்வி வழங்கப்பட்ட நிலை மாறி பொருளாதார ரீதியாக பின்தங்கிய குழந்தைகள் தனியார் பள்ளியில் படிக்க விரும்பினால் அதற்கு இதன் மூலம் வழிவகை செய்யப்படும்.

Free education

அந்த வகையில் இனி மேல் தனியார் பள்ளிகளில் 25 சதவீதமான குழந்தைகள் கட்டணம் இல்லாமல் தங்கள் விருப்பப்படி படிக்க முடியும். இந்த கட்டணத்தை நமது தமிழக அரசே ஏற்றுக் கொள்ளும் என்பதுதான் அந்த இனிப்பான செய்தி.

--Advertisement--

தமிழகத்தில் இருக்கக்கூடிய சுமார் 8000 தனியார் பள்ளிகளில் 20 முதல் 25 சதவீத மாணவர்கள் படிக்கிறார்கள். இந்த மாணவர்களுக்கான கட்டணத்தை தமிழக அரசே நேரடியாக தனியார் பள்ளிகளுக்கு செலுத்தி வருகிறது.

Free education

மேலும் இந்த கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 2023 – 2024 சேர்க்கைக்காக நீங்கள் விண்ணப்பம் செய்யலாம். இதற்காக நீங்கள் உங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகள் சேர்க்க வேண்டும் என்றால் அதற்கான விதிமுறைகளை இந்த வெப்சைட்டை https://rte.tnschools.gov.in பார்வையிடுவதின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.