Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

தினமும் இந்த கஞ்சி குடிப்பேன்.. உடம்பு ஃபுல் காலி.. சீரியல் நடிகை கேப்ரில்லா ஓப்பன் டாக்..!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியல் சுந்தரியாக அசத்தி வரும் சீரியல் நடிகை கேப்ரில்லா தமிழக இல்லத்தரசிகளின் இல்லங்களில் ஒரு மகளாகவே தற்போது வாழ்ந்து வருகிறார்.


நடுத்தர குடும்பம் ஒன்றில் பிறந்து கலெக்டராக வேண்டும் என்ற கனவில் பல்வேறு வகைகளில் போராட்டங்களை சந்தித்து சீரியலில் கலெக்டர் ஆகி தற்போது தனது நேர்த்தியான நடிப்பின் மூலம் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனதில் வாழ்ந்து வருகிறார்.

சுந்தரி சீரியல் கேப்ரில்லா..

சின்னத்திரை மட்டுமல்லாமல் வெள்ளி திரையில் நடித்து அசத்தி இருக்கக் கூடிய இவர் இணைய தளத்தில் நகைச்சுவை மற்றும் பல இணையதள வீடியோக்களில் நடித்திருக்கிறார்.

2019-ஆம் ஆண்டு வெளி வந்த ஐரா படத்தில் நயன்தாராவின் சிறு வயது கதாபாத்திரத்தில் நடித்து திரை உலகில் அறிமுகமான இவர் வாழ்க்கையில் படிப்படியாக முன்னேறியவர்.

சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய கேப்ரில்லா டிக் டாக் செயலி செயல்பாட்டில் இருந்த போது பிரபலமாக இருந்த நபர்களில் ஒருவராக திகழ்ந்தவர்.

---- Advertisement ----


உடம்பு புல்லா காலி..

சுந்தரி சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பேமசாக மாறியிருக்கும் இவர் அண்மை பேட்டி ஒன்றில் தன் உடல் முழுவதும் காலியாகிவிட்டது. எனினும் அந்த உடலை சீர் செய்ய ஷூட்டிங் செல்லக் கூடிய நேரங்களில் அதிக அளவு நீர் குடித்து வருவதாக கூறியிருக்கிறார்.

மேலும் உடல் ஆரோக்கியத்திற்கு எது மாதிரி உணவினை உட்கொள்ள வேண்டும் என்பதை மிகவும் நேர்த்தியான முறையில் பகிர்ந்து இருக்கிறார்.

அதில் காலை நேரம் சத்துமாவு கஞ்சியை குடித்து உடலை தேற்றி வருவதாக கூறினார். இதில் பல்வேறு வகையான பருப்புகளை போட்டு கஞ்சி ஒன்றினை உண்டாக்கி அதை குடிப்பதன் மூலம் உடல் ஆரோக்கியமாக மாறி வருவதை சொல்லக்கூடிய அவர் ஷூட்டிங் இல்லாத சமயத்தில் வீட்டில் இருக்கும் போது சரியாக அதை ஃபாலோ செய்ய முடியாது என்றார்.

உடல் ஆரோக்கியத்திற்காக கஞ்சி குடிப்பேன்..

மேலும் நம் தமிழகத்தில் அதிக அளவு அரிசி உணவினை உட்கொள்வார்கள். அந்த அரிசியை குறைத்து அதிகளவு காய்கறிகளை சேர்த்துக் கொள்கிறோமோ அது உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் என்று சொன்னதோடு மட்டுமல்லாமல் மதிய வேளைகளில் சிறிதளவு உணவு அதிக அளவு காய்களை உணவில் சேர்த்துக் கொள்வதாக கூறியிருக்கிறார்.

மேலும் இரவு பழ வகைகள் ஏதாவது ஒன்றையோ ஒரு டம்ளர் பால் போன்றவற்றை பருகுவதின் மூலம் உடல் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தலாம்.


எனவே ஒவ்வொரு நாளும் உணவில் கட்டாயம் அதிக அளவு காய்களும் சிறிதளவு பழமும் இடம் பெறுவது அவசியம் என்பதை மிக நேர்த்தியான முறையில் கேப்ரில்லா தெரிவித்திருக்கிறார்.

இதனை அடுத்து தினமும் தான் கஞ்சி குடிப்பதை ஓபனாக சொல்லி இருக்கும் சீரியல் நடிகை கேப்ரில்லாவின் பேட்டி ஆனது இணையதளங்களில் வைரலாக பரவி வருவதோடு கஞ்சி குடிப்பதால் ஏற்படும் நன்மைகளை பலரும் அறிந்து கொள்ள வழி செய்து உள்ளது.

எனவே உடல் ஆரோக்கியத்தை பேணி காக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அதிக அளவு காய்கறிகள் பல வகைகள் சத்து நிறைந்த பருப்பு வகைகளை உணவில் சேர்த்துக் கொண்டால் போதுமானது என்பதை பிரபல சீரியல் நடிகை உணர்த்திவிட்டார்.

Continue Reading

More in Tamil Cinema News

Trending Now

To Top