சாய் பல்லவி நடித்த “கார்கி” படத்திற்கு சர்வதேச அளவில் வரவேற்பு மற்றும் அந்தஸ்து.

ஜூலை 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான “கார்கி” படத்தை கௌதம் ராமச்சந்திரன் இயக்கியிருந்தார் இந்தப் படத்தில் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் சாய்பல்லவி நடித்திருந்தார்.இவரோடு கவிதாலயா கிருஷ்ணன் ,சரவணன் ,லிவிங்ஸ்ட போன்ற முன்னணி துணை நடிகர்கள் நடித்திருந்தது இந்த படத்திற்கு மிகவும் பலமாக இருந்தது. மேலும் “கார்கி” படத்திற்கு சர்வதேச அளவில் வரவேற்பு.

 இந்த படத்துக்கான இசையை கோவிந்த் வசந்தா அமைத்திருந்தார் .மேலும் இந்த படத்தை தமிழில் சூர்யாவின் 2டி நிறுவனம் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. இப்படம் வெளியான உடனேயே மக்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஏற்கனவே ரசிகர்களை கட்டிப்போட்டு இருக்கக்கூடிய சாய்பல்லவி இந்த படத்திலும் ஒரு படி மேலே சென்று அனைவரின் மனதில் இடம் பிடிக்கும் படியான நடிப்பில் சிக்சர் அடிக்கிறார்.

உளவியல் ரீதியாக இந்தக் கதை உள்ளது. குறிப்பாக தந்தைக்கும், மகளுக்கும் இடையே உள்ள உறவினை மிக நேர்த்தியான முறையில் கதைக்களமாக கொண்டு அருமையாக செதுக்கியிருக்கிறார்கள்.

 திரைஅரங்குகளில் மட்டுமல்லாமல் இந்தப் படம் ஓடி டிவியில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று ஓடி வருகிறது. சாய்பல்லவிக்கு  கார்கி திரைப்படம் மிகுந்த சிறப்பைப் பெற்றுத் தருவதோடு அவரது கேரியரில் மிகச்சிறந்த படமாக பேசப்படும்.

இந்தியா மட்டுமல்லாமல் சர்வதேச அளவிலும் இந்த படம் பேசப்படுகிறது. அதற்கு முக்கியமான காரணம் சர்வதேச திரைப்பட விழாவில் இந்தப் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது தான்.ஆமாம் அதுவும் ரஷ்யாவில் நடைபெற்ற 44வது சர்வதேச திரைப்பட விழாவில் தான் கார்கி படம் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறது.

இந்த தித்திப்பான அறிவிப்பை படக்குழுவினர் மிகவும் மகிழ்ச்சியுடன் வெளியிட்டுள்ளார்கள். இந்த படமானது பிளாக்பஸ்டர் பிரம் ரவுண்டு தா ஓல்ட் என்ற பிரிவின்கீழ் திரையிடப்பட்டுள்ளது. கார்கி படத்தின் சர்வதேச திரையிடலுக்கு  பின்னர் திரைப்படக் குழுவினர் அனைவரும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு மகிழ்ச்சியில் பல்வேறு வகையில் வெளிப்படுத்தி  வருகிறார்கள்.

கார்கி  படத்தைப் போலவே அல்லு அர்ஜுனின் புஷ்பா படமும் இந்த 44வது மாஸ்கோ  திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.