நடிகை கௌதமி, தமிழில் கடந்த 1988ஆம் ஆண்டு ரஜினியின் குருசிஷ்யன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
80 மற்றும் 90களில் முன்னணி நடிகையாக இருந்த கௌதமி, ரஜினி, கமல்ஹாசன் , விஜய்காந்த் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடிபோட்டு நடித்துள்ளார்.
நடிகை கௌதமி பிரபலமாக இருக்கும் போதே சந்தீப் பாட்டியா என்ற தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால், திருமணமான அடுத்த ஆண்டே இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
இந்த தம்பதியருக்கு சுப்புலட்சுமி என்ற ஒரு மகள் இருக்கிறார்.இதையடுத்து, கமலுடன் காதல் ஏற்பட்டு இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். கிட்டத்தட்ட 10 வருடங்கள் ஓரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்த இவர்கள் சமீபத்தில் பிரிந்தனர்.
தனது மகளின் எதிர்கால வாழ்க்கை குறித்து அக்கரை கொண்டு இந்த முடிவை எடுத்ததாக கௌதமி கூறினார். தற்போது, தனது மகள் சுப்புலட்சுமியுடன் இருக்கிறார்.
தமிழ் சினிமா ரசிகர்களால் 80களில் கொண்டாடப்பட்ட நடிகை தான் கௌதமி, இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் படங்கள் நடித்துள்ளார்.
மேலும் சின்னத்திரையிலும் கலக்கினார்.Life Again Foundation என்ற நிறுவனத்தை வைத்துள்ளார், ஆடை வடிவமைப்பாளராகவும் இருந்து வருகிறார். நடிகை கௌதமி 1998ம் ஆண்டு சன்தீப் பாட்டியா என்பவரை திருமணம் செய்தார் பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றார்.
2004ம் ஆண்டு நடிகர் கமல்ஹாசனுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார், பின் 2016ம் ஆண்டு அவருடனும் பிரிந்து இப்போது தனியாக மகளுடன் வாழ்ந்து வருகிறார்.
எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் நடிகை கௌதமி 1993ம் ஆண்டு எடுத்த புகைப்படத்தை வெளியிட்டார். அதைப்பார்த்த ரசிகர்கள் அட நம்ம கௌதமியா இது என ஆச்சரியமாக பார்க்கிறார்கள்.