தன் காதலை கன்பார்ம் செய்த நவரச நாயகன் மகன் கௌதம் கார்த்திக் … பச்சைக்கொடி காட்டிய மஞ்சிமா மோகன் குடும்பத்தார்!

டைரக்டர் மணிரத்தினத்தின் கடல் படத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தார் நவரச நாயகன் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக். ஆரம்ப நாட்களில் இவர் நடித்த படங்களுக்கு பெரும் வரவேற்பு அல்லது வெற்றியோ கிடைக்கவில்லை.

 

இருந்தாலும் விடாமுயற்சியோடு திரைத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இவர் தொடர்ந்து நடித்து வருகிறார் அந்த வரிசையில் தற்போது இவர் நடித்த படமான  ஆனந்தம் விளையாடும் வீடு அனைத்து மக்களாலும் விரும்பிப் பார்க்கக் கூடிய சூழலை உருவாக்கியுள்ளது மேலும் இது குடும்ப படமாக இருப்பதால் அனைவரும் இந்த படத்தை விரும்பிப் பார்க்கிறார்கள்.

இதனிடையே இவரும் மற்ற நடிகர்களைப் போல் காதலில் விழுந்துள்ளார் இவரைப் பற்றியும் மஞ்சிமா மோகன் பற்றியும் அடிக்கடி கிசுகிசுக்கள் வந்த வண்ணம் இருந்தது. இருவரும் தேவராட்டம் என்ற படத்தில் ஒன்றாக இணைந்து நடித்தபோது இன்ப காதல் மலர்ந்தது என்று கூறப்படுகிறது.

 

ஆனால் இருவருமே கிசுகிசுக்களுக்கு எந்தவித பதிலும் அளிக்கவில்லை இந்த நிலையில் இவர்கள் இருவரும் ஒன்றாக கார்த்திக்கின் நெருங்கிய நண்பரின் வீட்டு நிச்சயதார்த்தத்திற்கு சென்றுள்ளது இவர்களின் காதலை உறுதி செய்வது போல் உள்ளது.

 

தற்போது கௌதம் கார்த்திக், சிப்பாய், யுத்த சத்தம், செல்லப்பிள்ளை, பத்து தல போன்ற திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில், பத்து தல திரைப்படம் டிசம்பர் 16ந் தேதி வெளி வர உள்ள நிலையில்

மேலும் இவர்கள் இருவரும் சேர்ந்து இருக்கக்கூடிய போட்டோக்கள் வலைதளங்களில் பரவி  ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்திய வதோடு இவர்களின் காதலை கன்பார்ம் செய்யும் விதமாக உள்ளது.

 

இதனை அறிந்துகொண்ட இரண்டு வீட்டாரும் இவர்களின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டி விட்டார்களாம் இதனால் விரைவில் திருமணம் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரும் என்று கூறுகிறார்கள்.

 

மேலும் இவர்கள் காதல் பற்றி வெவ்வேறு விமர்சனங்கள் வந்த போதும் கிசுகிசுக்கள் வந்த போதும் வாய் திறக்காமல் இருந்த இந்த ஜோடிகள்  அமைதியாக சாதித்து விட்டார்கள் என்று தான் கூறவேண்டும்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீச்சல் உடையில் நடிகை மீனா.. பலரும் பார்த்திடாத தாறு மாறு வீடியோ..! .

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மீனா. இவர் 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக வலம் …