சீரியல்களில் வில்லியாக கலக்கிக் கொண்டு இருந்தாலும் இணையதளங்களில் படு பவ்வியமாக இருக்கிறார் சரவணன் மீனாட்சி காயத்ரி யுவராஜ் ( Gayathri Yuvaraj ).சீரியல்களில் வில்லியாக அதுவும் சரவணன் மீனாட்சி சீரியலில் வில்லி முத்தழகுவாக கலக்கி இருந்த காயத்ரி யுவராஜ் இணையதளங்களில் சேலைகளில் படு பவ்வியமாக போட்டோ ஷூட் நடத்தி இணையதளங்களில் பதிவிட்டிருக்கிறார்.
இது வைரலாக பரவிக் கொண்டு வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்கள் எல்லாமே ஓரளவிற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்று இருக்கின்றது. அதுலயும் சரவணன் மீனாட்சி சீரியல் சொல்லவே வேண்டாம்.
அதன் வெற்றியை தொடர்ந்து தான் மூன்று பாகங்களாக ஓடிக்கொண்டிருந்தது.இந்த சீரியலுக்குப் பிறகு தொடர்ந்து அவர் தென்றல் நிலா போன்ற தொடர்களில் நடித்தார் அதுமட்டுமல்லாமல் டான்ஸ் ரியாலிட்டி ஷோவில் பங்கு பெற்றார்.
சித்தி 2 வில் இவர் ராதிகாவின் மருமகள் ஆகவும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மாயனின் தங்கச்சி ஆகவும் நடித்திருக்கிறார்.இதில் சித்தி 2வில் வில்லியாக அந்த குடும்பத்தையே கதிகலங்க வைக்கும் ராட்சசி ஆகவும், நாம் இருவர் நமக்கு இருவர் 2 வில் அமைதியின் சொரூபமாக மாயனின் மூத்த தங்கச்சி ஆகவும் நடித்திருக்கிறார்.
ஆனால் இந்த சீரியலில் இவர் நல்லவரா கெட்டவரா என்று அறிய முடியாத வகையில் அமைதியாக நடந்துக் கொண்டிருக்கிறார்.போகப்போகத்தான் தெரியும் இந்த சீரியலிலும் இவரது கேரக்டர் எப்படி என்று.
சரவணன் மீனாட்சி சீரியலில் தொடர்ந்து இவருக்கு வந்ததெல்லாம் வில்லி கேரக்டர் தானாம். இந்நிலையில், இன்ஸ்டாகிராம் பாகத்தில் கவர்ச்சி உடையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.இதனை பார்த்த ரசிகர்கள், சீரியலில் குடும்ப பாங்கினியாக நடிக்கும் காயத்ரியா இது என்று ஆச்சரியத்தில் உள்ளனர்.