ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு உதாரணங்களாக, சிலரது வாழ்க்கை இருக்க தான் செய்கிறது.

காயத்ரி யுவராஜ்

அந்த வகையில் டான்ஸ் மாஸ்டர் யுவராஜ், சீரியல் நடிகை காயத்ரி இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். அதாவது சீரியலில் நடித்துக் கொண்டிருந்த காயத்ரி, நடனம் கற்றுக்கொள்ள டான்ஸ் மாஸ்டர் யுவராஜிடம் சென்றபோது, ஒரு கட்டத்தில் இருவருக்கும் காதல் ஏற்பட்டது.

காதலை ஒருவர் கூறுவர் வெளிப்படுத்திக் கொண்ட நிலையில், இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இப்போது இந்த தம்பதிக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர்.

பல சீரியல்களில்…

ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற சரவணன் மீனாட்சி, அரண்மனைக்கிளி, நாம் இருவர் நமக்கு இருவர் 2, மெல்லத் திறந்தது கதவு உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து, ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலமானவர் காயத்ரி யுவராஜ்.

---- Advertisement ----

சமூக வலைதளங்களில் மிக ஆக்டிவ் ஆக இருக்கும் அவர், அடிக்கடி தனது புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிடுவார். குறிப்பாக தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு, ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட லைக்ஸ், வாழ்த்துகளை பெறுவது வழக்கமாக இருந்து வருகிறது.

இதையும் படியுங்கள்: அந்த ஊசி போட்டுக்கிட்டு இந்த கவர்ச்சி நடிகை நடிப்பார்.. பயில்வான் ரங்கநாதன் வெளியிட்ட திடுக் தகவல்..!

கனவு இல்லம் – நிறைவேறிய ஆசை

சமீபத்தில் காயத்ரி யுவராஜ் தனது கனவு இல்லம் – பிரம்மாண்டமான தனது வீட்டை கட்டி முடித்தார். இந்த வீட்டின் கிரகப்பிரவேசம் நடந்தது. அந்த வீடியோக்களும், புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலானது. காயத்ரிக்கு ரசிகர்கள் ஏராளமானோர் தங்களத வாழ்த்துகளை தெரிவித்து, தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

நடன பள்ளி துவக்கம்

இந்நிலையில் காயத்ரி யுவராஜ் தம்பதியினர், அடுத்த கட்டத்திற்கு தங்கள் வாழ்க்கையை நகர்த்தி உள்ளனர். பிரமாண்ட வீட்டைத் தொடர்ந்து, புதியதாக நடன பள்ளியையும் இந்த தம்பதியினர் துவக்கி உள்ளனர்.

ரிதமிக் பீட் டான்ஸ் கோர்ட்

ரிதமிக் பீட் டான்ஸ் கோர்ட் என்று அந்த நடன பயிற்சி பள்ளிக்கு அவர்கள் பெயரிட்டுள்ளனர். பிரம்மாண்ட வீடு அதைத் தொடர்ந்து நடன பயிற்சி பள்ளி என அவர்கள் தொடங்கி இருப்பது, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துகளை குவித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்: நடிகை சவுந்தர்யா இறந்து 20 ஆண்டுகள்.. 100 கோடி சொத்து உயில் என்ன ஆனது..? பரபரப்பு தகவல்…!

குவியும் வாழ்த்துகள்

ப்பா.. பிரம்மாண்டம்.. என வியந்த ரசிகர்கள் காயத்ரி யுவராஜ் பதிவிட்ட அவரது புதிய பங்களா வீடு, நடன பள்ளி ஆகிய புகைப்படங்களுக்கு லைக்குகள் தெறிக்க விட்டு வருகின்றனர். வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

---- Advertisement ----