சமையல் மந்திரம் என்ற நிகழ்ச்சியில் உடலுறவு சார்ந்த கேள்விகளுக்கு பதில் கொடுக்கும் ஒரு நிகழ்ச்சியில் தொகுப்பாளினாக பணியாற்றி பிரபலமானவர் கிரிஜா ஸ்ரீ.
சில திரைப்படங்கள் மற்றும் குறும்படங்களிலும் நடித்திருக்கிறார். இந்நிலையில், தன்னுடைய குழந்தை பிறப்பு குறித்து ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார்.
என்னுடைய பிரசவ தேதி நெருக்கி கொண்டிருந்தது. சரியாக என்னுடைய பிரசவ தேதி என மருத்துவர்கள் குறித்து கொடுத்த தேதியில் மருத்துவமனைக்கு செல்ல முயற்சி செய்தோம்.
அன்று சரியான மழை, ஊரே தண்ணீரில் மிதக்கிறது. மிகவும் சிரமப்பட்டு மருத்துவமனையை சென்று அடைந்தோம். ஆரம்பம் முதல் கடைசி வரை சுகப்பிரசவம் என்று கூறினார்கள்.
ஆனால் அங்க போன பிறகு அறுவை சிகிச்சை மூலம் தான் பிரசவம் பார்க்க முடியும் என்று கூறிவிட்டார்கள். எனக்கோ பிரசவ வலியே ஏற்படவில்லை.
எனவே வீட்டிற்கு வந்து விட்டோம். ஆனால் என்னுடைய பிரசவ தேதி வந்துவிட்டது. என்ன செய்வது என்று எங்களுக்கு எதுவும் புரியவில்லை.
குழந்தை நல்லா இருக்கணுமே என்ற கவலை ஒரு பக்கம் வந்துவிட்டது. வேறு வழியில்லாமல் மீண்டும் மருத்துவமனைக்கு சென்றோம்.
கடைசிவரை வலி வரவே இல்லை. இறுதியில் அறுவை சிகிச்சை செய்துதான் குழந்தையை பெற்றெடுத்தேன்.
எனக்கு ஆபரேஷன் தியேட்டரை பார்த்து அவ்வளவு சந்தோஷமாக இருந்தது. எனக்கு ஒரு துளி கூட வழியில்லாமல் பிரசவம் நடந்தது. இடுப்பில் போட்ட ஊசி கூட எனக்கு வலிக்கவில்லை.
என் குழந்தையின் அழுகுரல் கேட்டதும் என் கண்களில் ஒரே கண்ணீர். குழந்தையை என் கண்ணில் ரொம்ப நேரம் காட்டவில்லை.
நான் வழக்கமான பிரசவத்தில் குழந்தை பெற்று இருந்தால் நாளை, அவன் நான் எங்கிருந்து பிறந்தேன் என்று கேட்டால் என்னால் அந்த உறுப்பை காட்ட முடியாது.
ஆனால் தற்பொழுது சிசேரியன் மூலம் அவன் பிறந்திருப்பதால் என்னுடைய வயிற்றுப் பகுதியை காட்டி இங்க தான் நீ பிறந்தாய் என்று கூச்ச்சமில்லாமல் காட்டுவேன்.
பொதுவாக நான் என்னை சார்ந்து வரும் எதிர்மறையான விமர்சனங்களை கண்டு கொள்ள மாட்டேன். அவற்றை டெலிட் கூட செய்ய மாட்டேன். நீங்க பேசுங்க என்று கண்டு கொள்ளாமல் போய்விடுவேன்.
அதனால் தற்போது எனக்கு எந்த விதமான எதிர்மறையான கருத்துக்களும் வருவது கிடையாது என பேசியிருக்கிறார் நடிகை கிரிஜா ஸ்ரீ.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.