திரைக்கு வருவதற்கு முன்பே வசூலில் சாதனை புரியும் காட்பாதர் …. சிரஞ்சீவி மற்றும் நயன்தாராவின் காம்பினேஷனில் விரைவில்…!

 மிக பிரம்மாண்டமான படமாக உருவாகிவரும் காட்பாதர் படத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க இருக்கிறார்கள் இவர்கள் இருவரின் நடிப்பை பற்றி சொல்லவே வேண்டாம் அந்த அளவுக்கு தூள் பறக்கும்.

 இந்த படமானது மலையாளத்தில் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆன லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக் ஆகும். எனவே இப்படம்  தெலுங்கில் சக்கை போடு போட்டு திரைக்கு வரும் முன்பே வியபாரத்தில் சூட்டினை  கிளப்பியுள்ளது.

மோகன் ராஜா தமிழில் ஜெயம், தனி ஒருவன், சந்தோஷ் சுப்ரமணியம், உனக்கும் எனக்கும் போன்ற  ஹிட் படங்களை இயக்கியவர் தான் இந்த காட்ஃபாதர் படத்தையும் இயக்கி உள்ளார்.

சமீபத்தில்தான் திருமணமானது நயன்தாராவிற்கு எனினும் எந்த படத்திற்காக அவர் மிகவும் சிறந்த முறையில் ஆற்றியிருக்கிறார்.பாலிவுட் நடிகர் சல்மான் கானும் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார். மேலும் படத்தில் மிகப் பெரிய நட்சத்திரங்கள் நடித்திருப்பதால் இந்த படத்தை எப்போது காண்போம் என்று அனைவரும் காத்திருக்கிறார்கள்.

 ரிலீசுக்கு தயாராக இருக்கின்ற இந்த படத்தின் டிஜிட்டல் உரிமை மட்டும் ரூ.57 கோடிக்கு தற்போது விற்கப்பட்டு உள்ளது. மேலும் சாட்டிலைட் மற்றும் ஆடியோ உரிமை ரூ.60 கோடிக்கும், திரையரங்க உரிமை ரூ.90 கோடிக்கும் விற்கப்பட்டு உள்ளதாம். இதன்மூலம் இப்படம் ரிலீசுக்கு முன்பே ரூ.207 கோடி வசூலித்துள்ளது.

---- Advertisement ----

 நினைத்துப் பாருங்கள் திரைக்கு வருவதற்கு முன்பே இத்தனை கோடிகளை வசூல் செய்து இருக்கும் இந்த படம் திரையிடப்பட்டால் ஒரு நாளில் எவ்வளவு வசூல் சாதனை புரியும் என்று.

நீண்ட நாட்களுக்கு பிறகு சிரஞ்சீவியின் நடிப்பை காண்பதற்காக தெலுங்கு ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தோடு இருக்கிறார்கள் எந்த திரைப்படமானது வரும் அக்டோபர் மாதம்  ரிலீசாகும் என்று தெரிகிறது.

---- Advertisement ----