மஞ்சுவாரியர் நடித்த கேரக்டரில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா – தெலுங்கு படம் காட்பாதர்!

மலையாளத்தில் வெளிவந்த லூசிபர் என்ற படத்தின் ரீமேக்காக தெலுங்கில் வரவேற்கக் கூடிய படம்தான் காட்பாதர். இப்படத்தில் தெலுங்கு மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துக்கொண்டிருக்கிறார். மலையாள த்தில் மஞ்சு வாரியார் நடித்த வேடத்தில் தான் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கேரக்டர் இருக்கும்.

 மோகன் ராஜா இயக்கி வரும் இந்தப் படத்தை பிரம்மாண்ட முறையில் தயாரித்து இருக்கிறார்கள். இந்த படத்தில் டிவி சல்மான்கான் போன்ற முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

சத்யப்ரியா ஜெய்தேவ் கேரக்டராக நடிக்கும் நயன்தாராவின் பட போஸ்டரை அறிமுகம் செய்துள்ள படக்குழு விரைவில் முதல் பாடலை வெளியிடப்போவதாக தெரிவித்திருக்கிறார்கள்.

தற்போது பட குழுவானது வெளியிட்டுள்ள நயன்தாரா போஸ்டரை பார்க்கும்  ரசிகர்கள் படத்தின் வரவுக்காக எதிர்பார்த்து காத்திருப்பதாக தெரிகிறது.

காட்பாதர் படத்திற்கு தமன் என்பவர் இசையமைத்திருக்கிறார். இந்த இசையானது இந்த படத்திற்கு மிகவும் பக்கபலமாக இருப்பதோடு ரசிகர்களின் மனதை கொள்ளை அடிக்கும் வகையில் ஒவ்வொரு பாடல்களின் வரிகளும் இருக்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

மலையாளத்தில் சக்கை போடு போட்ட கேங்ஸ்டர் அடிப்படையாகக் கொண்ட இந்த படம் கண்டிப்பாக தெலுங்கிலும் மிகப்பெரிய வெற்றியை தரும் என்பதில் ஐயமில்லை. இப்படத்தில் நடிக்க கூடிய அனைவருமே பிரம்மாண்ட நடிகர்கள் கட்டாயம் அவர்களின் நடிப்பை இந்த படத்தில் நிச்சயமாக வெளிப்படுத்தி படத்தில் வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்வார்கள்.

மேலும் காட்பாதர் பட குழுவானது நயன்தாராவின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட இருப்பதோடு விரைவில் படம் எப்போது ரிலீசாகும் என்ற விஷயங்களையும் பகிர்ந்து இருக்கிறார்கள்.

காட்பாதர் படமானது அக்டோபர் ஐந்தாம் தேதி திரையரங்குகளுக்கு  வரும் என்றும் இது மலையாளத்தில் வெளிவந்த லூசிபர் படத்தை விட அதிகளவு வசூலை குவிக்கும் என்று  கூறப்பட்டது மேலும் அதிக அளவு எதிர்பார்க்கப்பட்ட ஆச்சார்யா படம் சரியாக ஓடவில்லை எனினும் இந்த படம் சிரஞ்சீவி ஒரு பிளாக்பஸ்டர் படமாக இருக்கும் என படக்குழுவினர் தெரிவித்தார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

உடல் எடை கூடி.. ஆள் அடையாளம் தெரியாமல் இருக்கும் லட்சுமி மேனன்.. வைரலாகும் வீடியோ..!

கேரளாவை பூர்வீகமாகக் கொண்டு தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் லட்சுமிமேனன். இவர் முதல் படத்திலிருந்து ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் கவர்ந்து …