பாருப்பா..! – சினிமாவுல நடிச்சதும்.. பளபளன்னு ஹீரோயினி மாதிரி ஆகிட்டாங்க..! – கோலி சோடா சீதா..!!

கோலி சோடா சீதா : கடந்த 2014 ஆம் ஆண்டு வழியாகி சூப்பர் ஹிட் அடிச்சா திரைப்படம் கோலிசோடா இந்த படத்தை இயக்குனர் விஜய் மில்டன் இயக்கியிருந்தார். இந்த படத்தில் பசங்க திரைப்படத்தில் நடித்த நான்கு சிறுவர்களும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இதனால் இந்த படத்திற்கு இயற்கையாகவே எதிர்பார்ப்பு எகிரியது. இந்த படத்தில் கூடுதலாக ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடித்தவர் நடிகை சீதா. இந்த படத்தில் நடிகை சீதாவின் கதாபாத்திரம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

காலங்கள் கடந்தும் இந்த கதாபாத்திரத்தின் தாக்கம் ரசிகர்கள் மத்தியில் ஆழமாக நிற்கின்றது. இயக்குனர் விஜய் மில்டன் இந்த கேரக்டருக்கு நிறைய பெண் சிறுமிகளை ஆடிஷன் செய்திருக்கிறார்.

ஆனால் யாருமே இந்த கதாபாத்திரத்திற்கு செட்டாகவில்லை. அதன் பிறகு ஒரு நாள் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்த பொழுது நடிகை சீதாவை எதிர்சியாக பார்த்திருக்கிறார்.

இவரை பார்த்ததும் இவர் இந்த படத்தில் நடித்த சரியாக இருக்கும் என தோன்றியது. எனவே அவரை சற்று நேரம் பின்தொடர்ந்து சென்று உங்களுடைய ஃபோன் நம்பர் கிடைக்குமா என்று கேட்டிருக்கிறார்.

---- Advertisement ----

இதனால் கடுப்பான சீதா உனக்கு வெட்கமாக இல்லையா..? என்று தூ என துப்பி இருக்கிறார். நான் உன்னை சினிமாவில் நடிக்க வைக்கிறேன் எனக் கூறியும் கூட விஜய் மில்டனிடம் சீதா சரியாக பேசவில்லையாம்.

அதன் பிறகு அவருடைய தோழியின் வீட்டிற்கு சென்று அவருக்கு விஷயத்தை புரிய வைத்து படத்தில் நடிக்க வைத்தேன் என்ற கூறியிருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய இவர் கோலிசோடா படத்தில் நடிக்க எனக்கு தற்செயலாக தான் வாய்ப்பு கிடைத்தது.

அந்த படத்தில் நடிக்கிறேன் என்று கூறியதும் என்னுடைய நண்பர்களே இந்த படத்தில் நீ நடிக்கிறியா..? உன்னுடைய மூஞ்சை அவர்கள் ஒழுங்கா பாக்கலையா..? என்று என்னை கலாய்த்தார்கள்.

அதன் பிறகு நிறைய பட வாய்ப்புகள் எனக்கு கிடைத்தது. ஆனால், அதற்கு பிறகு ஒரு கட்டத்தில் எனக்கு சினிமா வாய்ப்புகள் எல்லாம் போய்விட்டது. நான் பார்ப்பதற்கு நல்லா இல்லை என்பதால் தான் எனக்கு பட வாய்ப்பு கொடுக்க மாட்டேன் என்கிறார்கள் என்று உருக்கமாக பேசியிருக்கிறார்.

இந்நிலையில் பிரபல யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த அவருடைய புகைப்படங்கள் சமீபத்தில் இணையத்தில் வைரல் ஆகிய வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் சினிமாவில் நடிச்சதும் பளபளன்னு ஹீரோயின் மாதிரி ஆகிட்டாங்க என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

---- Advertisement ----