உடற்பயிற்சி எந்த நேரத்தில் செய்வது.

நாம் அனைவரும் உடற்பயிற்சி செய்வது மிகச் சரியான நேரம் காலையில்தான் என்று கருதுகிறோம். ஆனால் இது முற்றிலும் தவறானது .உடற்பயிற்சி என்பது நமது உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி உற்சாகத்தையும் தரக்கூடியதாக இருக்க வேண்டும். அப்போதுதான் உடற்பயிற்சி செய்வதில் பலன் கிடைக்கும். 

காலையில் உடற்பயிற்சி செய்வதை விட மாலை நேரத்தில் உடற்பயிற்சி செய்வதுதான் உடலுக்கு மிகவும் நல்லது என்று ஆய்வுகள் கூறுகிறது. 

உடற்பயிற்சி செய்யும்போது  நன்மை, தீமைகள் அமையலாம் அல்லது வேறுபடலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த உடற்பயிற்சியை குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் டென்மார்க் பல்கலைக் கழகத்தில் காலையில் உடற்பயிற்சி செய்வதை விட மாலையில் உடற்பயிற்சி செய்தால் அதிக நன்மைகள் கிடைக்கும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து பல்கலைக்கழக பேராசிரியர் கூறுகையில் காலையில் உடற்பயிற்சி செய்தால் தசை செல்களை தூண்டி உடலை மிகவும் சுறுசுறுப்பாக வைக்க உதவுகிறது. இதனால் உடலில் உள்ள சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவு சீராக இருக்கிறது. 

இதேபோல் மாலை நேரத்தில் செய்யப்படும் உடற்பயிற்சிகள் உடலில் புத்துணர்ச்சியை அதிகரிக்கிறது. நீண்ட நேரம் சோர்வடையாமல் சுறுசுறுப்படைய இது உதவுகிறது என்கிறார். 

மேலும் இது குறித்த ஆய்வுகளை  எலிகள் வைத்து பரிசோதனை செய்து உள்ளார்கள் .அது காலையில் உடற்பயிற்சியில் ஈடுபட்டால் உடலில் உள்ள அதிக வளர்ச்சிதை மாற்றத்தை காண முடிந்து. 

மாலை நேரத்தின் போது உடற்பயிற்சிகள் உடலில் ஆற்றல் அதிகரித்ததை அவர்கள் உணர்ந்துள்ளார்கள். காலை மற்றும் மாலையில் உடற்பயிற்சியை தொடர்ந்து செய்வதால் அது நேரடியாக உடலில் சர் காடியன் கடிகாரத்தை ஒழுங்குபடுத்தும் HIF 1 ஆல்பா என்ற புரதத்தை கட்டுப்படுத்துகிறது. 

நேரம் மாலை நேர உடற்பயிற்சி மூலம் மன அழுத்தம் குறைகிறது. எனவே காலை வேளையில் உடற்பயிற்சி செய்வதை விட மாலை நேரம் உடற்பயிற்சி செய்வதற்கு ஏற்றது உடல் நன்கு ஒத்துழைப்பு தரும்.

---- Advertisement ----

Check Also

அவ எனக்கு தாண்டா.. நடு நம்பர் நடிகைக்காக நடு ரோட்டில் அடித்துக்கொண்ட நடிகர்கள்… அட கொடுமைய..!

திரைத்துறையில் தினம் தினம் புது புது கூத்துக்கள் அரங்கேறி வருகிறது. அவற்றைப் பற்றிய சுடச்சுட செய்திகளும் இணையங்களில் வெளி வந்து …