“திரும்ப வந்துட்டேன்னு சொல்லு…” – உடலோடு ஒட்டிய உடையில்.. சிக்கென நிற்கும் ஹன்ஷிகா..!

நடிகை ஹன்சிகா தற்போது அறிமுக இயக்குனர் ஜே.எம் ராஜா சரவணன் இயக்கும் புதிய படமொன்றில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு ‘ரவுடி பேபி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையமைக்கிறார். செல்லதுரை ஒளிப்பதிவு செய்கிறார்.

ரவுடி பேபி படத்தில் ஹன்சிகாவுடன் இணைந்து சத்யராஜ், மீனா, ராம்கி, சோனியா அகர்வால், ராய் லட்சுமி, ஜான் கோக்கன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்த பர்ஸ்ட்லுக் போஸ்டரை நடிகர் ஆர்யா தன்னுடைய சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.ஹன்சிகா தற்போது ‘பாட்னர்’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் அவர் நடித்துள்ள ‘மஹா’ திரைப்படம் வருகிற 28-ந்தேதி வெளியாக உள்ளது.

அடுத்ததாக பெயரிடப்படாத இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.தமிழில் முன்னணி நாயகர்களான தனுஷ், விஜய், சிம்பு, என அடுத்தடுத்து முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்ததன் மூலம் முன்னணி நாயகியானவர் ஹன்சிகா.

பல ஹிட் படங்களில் நடித்த ஹன்சிகா குட்டி குஷ்பூ போல இருப்பதாக கூறப்பட்டாலும், இவரது உடல் எடை குறித்து விமர்சனங்கள் எழத்தான் செய்தன. அதோடு பட வாய்ப்புகளும் குறைய துவங்கியது. இதற்கிடையே ஹன்ஷிகாவின் 50-வது படமான மகா பல சிக்கல்களை கொண்டு வந்தது.

போதை பொருள் பயன்படுத்தும் பெண் சாமியார் வேடத்தில் இவர் கொடுத்த போட்டோ சூட் பல எதிர்ப்பு குரல்களை வகுத்தது.மஹா படத்தில் ஹன்ஷிகாவின் முன்னாள் காதலரான நடிகர் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

அதோடு சிம்பு தொகுத்து வழங்கும் பிக்பாஸ் உள்டய்மதிக்கு ஹன்ஷிகாவும் வருகை தருவார் என எதிரிபார்க்கப்பட்டது.இதற்கிடையே ஹன்சிகா அவ்வப்போது ஸ்லிம் பிட்டில் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. செம பிட்டாக அவர் கொடுத்துள்ள போட்டோஸ் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.