நடிகை ஹன்சிகா ( Hansika ) சமீபத்தில் தன்னுடைய தோழியின் முன்னாள் கணவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு மீண்டும் திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார் நடிகை ஹன்சிகா.
குழந்தை நட்சத்திரமாக பல்வேறு சீரியல்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்த பிரபலமானவர் ஹன்சிகா. ஒரு கட்டத்தில் தன்னுடைய 16 வது வயதிலேயே இளம் குமரியாக ஹீரோயின் ரேஞ்சுக்கு மாறினார்.
இதனால் 16 வயதிலேயே இவருக்கு ஹீரோயின் வாய்ப்பு கிடைத்தது. பல்வேறு முன்னணி இளம் நடிகர்களின் படங்களில் அவர்களுக்கு ஜோடியாக நடித்த அசத்திய நடிகை ஹன்சிகா தற்பொழுது பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் பிரபல ஊடகம் ஒன்று நடிகை ஹன்சிகா தெலுங்கு சினிமாவில் நடக்கக்கூடிய பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் குறித்து பேசி இருக்கிறார் எனவும் பிரபல ஹீரோவால் நடிகை ஹன்சிகா தொந்தரவுக்கு உள்ளானார் என்றும் சில தகவல்களை வெளியிட்டிருந்தது.
இந்த தகவல் இணையத்தில் வயர்லானதை தொடர்ந்து நடிகை ஹன்சிகா இது குறித்து பதில் அளித்து இருக்கிறார். அவர் கூறியதாவது, நான் அப்படி எதுவும் கூறவில்லை இப்படி குப்பையான தகவல்களை பிரிண்ட் செய்வதை நிறுத்துங்கள் என கோபமாக பதில் அளித்து இருக்கிறார்.
நடிகை ஹன்சிகாவின் இந்த பதிலும் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. முன்னதாக பிரபல நடிகர் சிலம்பரசனுடன் காதலில் இருந்த நடிகை ஹன்சிகா அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்தார் என்று கூறப்பட்டது.
அதிலும் காரில் பயணித்துக் கொண்டிருக்கும் போது அவருடன் ஏற்பட்ட சண்டையால் தன்னுடைய காரில் இருந்து நடிகர் சிம்புவை நடுவழியில் இறக்கி விட்டு காதலை பிரேக் அப் செய்திருக்கிறார் நடிகை ஹன்சிகா என்ற தகவலும் கோடம்பாக்கம் வட்டாரத்தில் அவ்வப்போது முனுமுனுக்கப்படும் ஒன்று.
ஆனால், இது குறித்து உண்மை என்ன என்று தெரியவில்லை. இந்நிலையில், பட வாய்ப்புக்காக பிரபல தெலுங்கு ஹீரோ ஒருவர் படுக்கை வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தார் என்ற தகவலுக்கு நடிகர் ஹன்சிகா மறுப்பு தெரிவித்து தன்னுடைய பதிலடிக்கு கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.