இப்படியொரு Relationship எல்லாருக்குமே இருக்கும்.. – எதிர்நீச்சல் ஹரிப்பிரியா ஓப்பன் டாக்..!

பல்வேறு தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகையாக இருப்பவர் நடிகை ஹரிப்பிரியா இசை.

தன்னுடன் சீரியலில் நடித்த சக நடிகர் விக்னேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஒரு குழந்தைக்கு தாயான நிலையில் தங்களுக்கும் ஏற்பட்ட சில முரண்பாடுகள் காரணமாக அவரை விவாகரத்து செய்து விட்டார்.

தற்பொழுது சீரியலில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் ஹரிப்பிரியா. அவ்வப்போது இணைய ஊடகங்களில் பேட்டி கொடுப்பதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

அந்த வகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் உங்களுடைய Comfort Zone-ஐ தாண்டி ஏதாவது ஒரு ரிலேஷன்ஷிப் உங்களை தொந்தரவு செய்து இருக்கிறதா..? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த ஹரிப்பிரியா, ஆம் இருந்திருக்கிறது, என்னைக் கேட்டால் எல்லோருக்குமே இப்படியான ஒரு ரிலேஷன்ஷிப் இருந்திருக்கும்.

அந்த ரிலேஷன்ஷிப்பை தொடர்வதும் முடித்துக் கொள்வதும் அவரவருடைய தனிப்பட்ட விருப்பம். அதில் கருத்து சொல்வதற்கு நமக்கு எந்த ஒரு உரிமையும் கிடையாது. அவரவருடைய தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் அதனை விட்டுவிட வேண்டியது தான்

எல்லோருக்குமே அவர்களுக்கு என ஒரு Comfort Zone இருக்கும் அந்த எல்லையைத் தாண்டி ஒருவர் பழகுகிறார்.. அல்லது, பேசுகிறார்.. அல்லது, ஆதிக்கம் செலுத்த முயல்கிறார் என்றால் அது சார்ந்த நபருக்கு கண்டிப்பாக ஒரு சங்கடமான நிலையை உருவாக்கும்.

அந்த சங்கடமான நிலையை பொறுத்துக் கொண்டு அந்த நபருடன் உறவை தொடர்வதும் அல்லது முடித்துக் கொள்வதும் அல்லது அங்கேயே அந்த பேச்சை நிறுத்துவதும் அவர்களுடைய விருப்பம்.. தனிப்பட்ட நபர்களின் விருப்பம் என பேசி இருக்கிறார் நடிகை ஹரிப்பிரியா.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

விஜய் படங்களின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகைகள் நிலைமை இப்படி இருக்கும்..! – நடிகை காயத்ரி ஜெயராமன்..!

பிரபல நடிகை காயத்ரி ஜெயராமன் கடந்த 2001 ஆம் ஆண்டு நடிகர் பிரபுதேவா நடிப்பில் வெளியான மனதை திருடிவிட்டாய் என்ற …