அனுபமா பரமேஸ்வரன் குழந்தை புகைப்படத்தை பார்த்து இருக்கிறீர்களா !

தமிழிலும் மலையாளத்திலும் நன்கு அறியப்பட்ட நடிகையான அனுபமா பரமேஸ்வரன் அவர்கள் கேரள மாநிலம் திருச்சூருக்கு அருகில் இருஞ்சால குடை என்ற கிராமத்தில் 1996 பிப்ரவரி 20ஆம் தேதி பிறந்தவராவார். இவருக்கு மாலு என்ற மற்றொரு துணை பெயரும் உள்ளது. இவருக்கு பரமேஸ்வரன் என்ற தந்தையும் சுனிதா பரமேஸ்வரன் என்ற தாயும் அக்ஷய் பரமேஸ்வரன் என்ற சகோதரரும் உள்ளனர்.

அனுபமா பரமேஸ்வரன் அவர்கள் 2015 ஆம் ஆண்டு வெளியான பிரேமம் என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் இந்திய திரையுலகில் மிகப்பெரிய புகழை அடைந்தார். இந்த திரைப்படம் பலருக்கும் திருப்புமுனையாக இருந்தது.

இந்தப் படத்தில் கல்லூரி மாணவராக நடித்திருந்த நிவின் பவுலி அவர்களுக்கு இந்த திரைப்படம் இந்திய அளவில் மிகப்பெரிய மார்க்கெட்டை தந்தது எனலாம். ஏனெனில் இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பே இந்த திரைப்படத்தின் பாடல்கள் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இந்த படம் மலையாள மொழியில் மட்டுமே வெளியானது என்றாலும் தமிழிலும் தெலுங்கிலும் கன்னடத்திலும் மிகப்பெரிய அளவில் அனைவராலும் பேசப்பட்ட திரைப்படமாக இது விளங்கியது.

தமிழ்நாட்டின் ஊட்டி பகுதியில் பிறந்து தற்போது நம்பர் ஒன் தென்னிந்திய நடிகையாக விளங்கி வரும் சாய்பல்லவி அவர்களுக்கு இந்த திரைப்படம் தான் மிகப்பெரிய திருப்புமுனையாக இருந்தது. இந்த திரைப்படத்தில் பெரிய அளவு மேக்கப் இல்லாமல் முகத்தில் சிறு சிறு பருக்களுடன் இருந்தாலும் இவரின் நடிப்பு இவரின் தோற்றம் தென்னிந்திய திரைப்பட ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று இருந்தது.

அதே திரைப்படத்தில் சிறு குழந்தை வேதத்திலும் அதன் பின்பு நிவின் பவுலியின் மனைவியாகவும் நடித்திருந்த அனுபமா பரமேஸ்வரன் அவர்கள் இந்த படத்தின் மூலம் மிகப் பெரிய திரை புகழைப் பெற்றிருந்தார் அதன் மூலம் அவருக்கு தெலுங்கிலும் தமிழிலும் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வரத் தொடங்கி இருந்தது.

---- Advertisement ----

எந்த ஒரு புது கதாநாயகி தென்னிந்திய திரைப்படங்களில் வந்தாலும் அதை தனது படத்திலும் அவருக்கு நடிக்க வாய்ப்பு கொடுக்கும் நடிகர் தனுஷ் அவர்கள் தான் இரட்டை வேடத்தில் நடித்த முதல் திரைப்படம் ஆன கொடி திரைப்படத்தில் இரண்டாம் கதாநாயகியாக அனுபவமா பரமேஸ்வரன் அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருந்தார் இந்த திரைப்படம் தமிழ்நாட்டில் அனுபமா பரமேஸ்வரன் அவர்களுக்கு நல்ல திரைப் புகழ் கொடுத்தது.

தற்போது சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நடிகை அனுபாமா பரமேஸ்வரன் அவர்கள் தனது சிறுவயது புகைப்படத்தையும் தனது சகோதரரின் புகைப்படத்தையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார் இது தற்போது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்கப்பட்ட புகைப்படமாக இன்ஸ்டாகிராமில் வலம் வருகிறது. இது போன்ற சுவாரசியமான சினிமா தகவல்களை தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

---- Advertisement ----