42 வது பிறந்த நாள் விழாவை ஆதரவற்ற குழந்தைகளுடம் கொண்டாடிய ஜெயம் ரவி!

 

ஜெயம் படம் மூலம் அறிமுகமான ஜெயம் ரவி இந்த படத்தில் மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இதன் காரணமாக அவரின் பெயருக்கு முன்னால் ஜெயம் என்று போடப்பட்டது.

இந்த படத்திற்குப் பிறகு பல படங்களில் நடித்த இவர் தனி ஒருவன் படத்தில் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். பேராண்மை போன்ற படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் நடித்து இருந்தது அனைவரையும் கவர்ந்தது.

 பிறகு வெளிவந்த படங்களில் அவர் வித்தியாசமாக நடித்ததோடு ஏதேனும் ஒரு செய்தியை மக்களுக்கு தருவதில் குறிக்கோளாக இருந்தார். இவருக்கு என ஒரு மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

 அதை இவர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் ராஜராஜ சோழனாக நடித்திருக்கிறார் இவரின் நடிப்பு  கலக்கலாக இருக்கும் என்று பேசப்படுகிறதே மேலும் இந்த படமானது வரும் செப்டம்பர் 30ஆம் தேதி மிக பிரம்மாண்ட முறையில் தமிழ் திரையரங்குகளுக்கு வெளிவர உள்ளது பல மொழிகளில் படம் பிடிக்க பட்டுள்ள இந்த படம் இந்தியா முழுவதும் திரையிடப்படும். இந்த பிரமாண்ட படத்தை  பார்ப்பதற்காக அனைவரும் ஆவலாக காத்திருக்கிறார்கள்.

 இந்த நிலையில் கடந்த 10ஆம் தேதியன்று ஜெயம்ரவி அவர்கள் தனது 42வது பிறந்தநாளை மிகவும் கோலாகலமாக ஆதரவற்ற குழந்தைகளுடன் இணைந்து கொண்டாடி இருக்கிறார்.

 இந்த கொண்டாட்டத்தில் ஜெயம்ரவியின் குடும்பத்தார் நண்பர்கள் ரசிகர்கள் என அனைவரும்  ஜெயம் ரவிக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததோடு  கைகளையும் வழங்கியுள்ளார்கள்.

இந்த கொண்டாட்டத்தில் முக்கிய விருந்தினராக ஜெயம்ரவியின் மாமியார் சுஜாதா அவர்களும் தனது மருமகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு வாழ்த்து கூறியிருக்கிறார்.

ஜெயம் ரவியின் மாமியாராக சுஜாதா சுஜாதா ஹோம் மூவி மேக்கர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை வைத்திருப்பது அனைவருக்கும் தெரியும்.

எளிமையான முறையில் ஜெயம் ரவி தனது பிறந்தநாளை ஆசிரமத்தில் கொண்டாடி இருப்பது அனைவரும் பாராட்டும் படியாக இருந்தது. தற்போது இவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்களை அனைவரும் பார்த்து வருகிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

கவர்ச்சிக்கு நோ சொல்லும் சாய் பல்லவியா இது..? நம்பவே முடியலையே..

இந்த பூனையும் பால் குடிக்குமா என்று கேட்கும் நிலையில்தான், சில நடிகைகளின் நடவடிக்கை இருக்கும். கவர்ச்சியாக நடிப்பதா, அதெல்லாம் என்னால் …