ஆரோக்கியத்தைப் பேணுங்கள்

ஆரோக்கியம் என்பது மிகவும் இன்றியமையாத ஒன்று என்பதை அனைவரும் புரிந்து கொள்ள /வேண்டும். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்ற பழமொழிக்கேற்ப நமது உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் எல்லாவித செயல்களையும் மிகவும் சிறப்பாக செயல்படுத்த முடியும். அப்படிப்பட்ட ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு என்னென்ன வழிகள் உள்ளது  என்பதை இனி பார்க்கலாம்.

ஆரோக்கியத்தை பேணும் வழிகள்

 உங்கள் ஆரோக்கியத்தைப் பேணுவதற்காக தினமும் நீங்கள் 3 லிட்டர் தண்ணீரை அருந்த வேண்டும். கட்டாயமாக அரைமணிநேரம் உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். ஒரு மனிதனுக்கு நல்ல உடற்பயிற்சி என்றால் அது நடைப்பயிற்சி என்று தான் கூற வேண்டும். அரை மணி நேரம் நடப்பதால் உங்கள் உச்சி முதல் பாதம் வரை புத்துணர்வு ஏற்படும்.

ஞாபகசக்தியை கொடுக்கக்கூடிய ஊட்டச்சத்துக்களை எடுத்துக் கொள்வதின் மூலம் உடல் ஆரோக்கியத்தோடு நீங்கள் பணி செய்யும் திறனையும் இவை கூட்டும்.

---- Advertisement ----

ஆரோக்கியத்தைப் பேணும் போது அதிக அளவு நமது பாரம்பரிய உணவுகளை எடுத்துக்கொள்வது நலம். துரித உணவுகளைத் தவிர்த்துவிடுங்கள் நமது உடல்நலத்திற்கு நன்மை பயக்கும். அதுமட்டுமல்லாது உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய மைதா வெள்ளை சர்க்கரை போன்றவற்றை  தவிர்த்து வெல்லம் நாட்டுச் சர்க்கரை போன்றவற்றை பயன்படுத்துவதின் மூலம் உடலில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.

மேலும் சிறுதானியங்களை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் கூடுதலாக ஊட்டச்சத்தும் நோய் எதிர்ப்பு சக்தியும் இயற்கையாகவே நமக்கு கிடைக்கும்.

வேலைக்கு செல்பவர்கள் மதிய வேளைகளில் மிக எளிதில் பரோட்டாவை உண்ணுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள் இது வயதாகும் போது அவர்களுக்கு கட்டாய சர்க்கரை வியாதியை கொடுக்கக் கூடிய சூழ்நிலையை உருவாக்கும் என்பதை உணர்ந்து அது போன்ற உணவுகளை தவிர்த்துவிட்டு கம்மங்கூழ் ராகிக்குழ் போன்றவற்றை குடிப்பது மிகவும் நல்லது.

வாரம் இருமுறை எல்லா வகையான பழங்களையும் குறிப்பாக நமது நாட்டில் விளையக்கூடிய பழங்களை எடுத்துக்கொள்வது மிகவும் சிறப்பு வாய்ந்தது. இது உடலுக்கு தேவையான வைட்டமின்களும் தாதுக்களும் மிக எளிதில் தரும் ஆற்றல் கொண்டது.

 

---- Advertisement ----