பெரிய தப்பு பண்ணிட்டேன்.. வீட்ல அடி வெளுத்துட்டாங்க..! -பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமா ராஜேஷ்..!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் நடிகை ஹேமா ராஜ்குமார்.

தன்னுடைய ஆரம்ப காலத்தில் பல்வேறு பொருளாதார பிரச்சனைகளை சந்தித்திருக்கும் நடிகை ஹேமா ராஜ்குமார் சீரியலில் நடித்த பிறகு சமீபத்தில் புது வீடு வாங்கி அதில் குடியேறினார்.

அந்த மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார். இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் முதன்முதலில் நான் கனா காணும் காலங்கள் சீரியலில் நடிப்பதற்காக ஆடிஷனல் கலந்து கொண்டேன். அதில் தேர்வுமாகிவிட்டேன்.

ஆனால் ஆர்வக்கோளாறில் என்னுடைய தொலைபேசி எண்ணுக்கு பதிலாக என்னுடைய அப்பாவின் தொலைபேசி எண்ணை கொடுத்து விட்டேன். பெரிய தப்பு பண்ணி விட்டேன்.

நான் தேர்வான விஷயத்தை என்னுடைய அப்பாவுக்கு போன் செய்து கூறிவிட்டார்கள். நான் சீரியலில் நடிக்க இருக்கக்கூடிய விஷயம் என் அப்பாக்கு தெரிந்து விட்டது.

அன்று வீட்டில் அடி வெளுத்து விட்டார்கள். அதன் பிறகு சீரியல் வேண்டாம் என்று அந்த ஆசையை சிறிது காலம் மூடி வைத்து தன்னுடைய வேலையை பார்த்துக் கொண்டிருந்தேன்.

அதன் பிறகு இயற்கையாக இந்த சீரியலில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்துவிட்டது என பேசி இருக்கிறார் நடிகை ஹேமா ராஜ்குமார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

“திருமணத்திற்கு முன்பே உடலுறவு என்பது…” – நடிகை அதுல்யா ரவி சொல்வதை கேட்டீங்களா..?

சமீப காலமாக திருமணத்திற்கு முன்பே அல்லது திருமணம் செய்து கொள்ளாமலே கணவன் மனைவியாக இருக்கும் ஜோடிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து …