“மெதுவா… நீ.. தொடு வா..” – சும்மா சுர்ருனு… கவர்ச்சி ஆட்டம் போடும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா..! – வைரல் வீடியோ..!

விஜய் டிவி தொலைக்காட்சியில் அண்ணன் – தம்பி பாசத்தை அடிப்படை கதையாக கொண்டு ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் ( Pandiyan Stores ) சீரியலுக்கும், இதில் நடிக்கும் நடிகர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. சாதாரண மளிகை கடைக்காரர் குடும்பத்தில் அண்ணன், தம்பிகளுக்கு நடக்கும் பாச போராட்டங்கள் தான் கதை.

சிம்பிளாக இருந்தாலும் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் மவுசு அதிகம். பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை – கதிர் ஜோடிக்கு அடுத்த படியாக ரசிகர்களை கவர்ந்தது மீனா – ஜீவா ஜோடி தான். எம்.சி.ஏ. படித்த ஹேமா ராஜ்குமார் தொலைக்காட்சி சேனல் ஒன்றில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றினார். பின்னர் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கத் துவங்கினார்.

குல தெய்வம், மெல்ல திறந்தது கதவு, சின்ன தம்பி உள்ளிட்ட தொடர்களில் நடித்துள்ளார் ஹேமா. அவர் பாயும் புலி, அட்டக்கத்தி ஆகிய படங்களிலும் நடித்திருக்கிறார்.ஹேமாவுக்கும், சதீஷ் என்பவருக்கும் திருமணம் நடந்தது.

திருமணத்திற்கு பிறகும் ஹேமா தொடர்ந்து தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். சதீஷ் தன் மனைவி ஹேமாவுக்கு பக்கபலமாக இருக்கிறார்.அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தனியாக யூட்யூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

இன்ஸ்டாவிலும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிடுவது வாடிக்கை. அந்த வகையில், தற்போது எதற்கும் துணிந்தவன் படத்தில் இருந்து ஒரு பாடலுக்கு சிணுங்கியபடி சும்மா சுர்ருனு கவர்ச்சி ஆட்டம் போட்டு கலக்கியுள்ளார்.

அந்த வீடியோ ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

இணையத்தில் கசிந்த ராஷ்மிகா மந்தனா தனுஷ் ஒன்றாக இருக்கும் வீடியோ… இதோ..

இணையத்தில் கசிந்த ராஷ்மிகா மந்தனா தனுஷ் ஒன்றாக இருக்கும் வீடியோ… இதோ..

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான ஒரு இடத்தில், முன்னணி நடிகராக இருந்து வருபவர் நடிகர் தனுஷ். சமீபத்தில் அருண் மாதேஸ்வரன் …