லிப்லாக் காட்சிக்கு ஹீரோயின் OK சொல்லியும்.. நடிக்க மறுத்த 5 ஹீரோக்கள்…!

லிப்லாக் காட்சிக்கு ஹீரோயின் OK சொல்லியும்.. நடிக்க மறுத்த 5 ஹீரோக்கள்…!

இந்தி படங்களில் முத்தக்காட்சிகள் என்பது சர்வசாதாரணமாக காட்டப்படும். பாலிவுட் நடிகர், நடிகைகளில் யாரும் முத்தக்காட்சிகளில் நடிக்க தயங்கவே மாட்டார்கள்.

ஏனென்றால் யாரை பார்த்தாலும் உடனே கட்டிப்பிடித்து அன்பை பரிமாறுவதுதான் இந்தி படவுலகில் வழக்கம். அதனால் உதட்டு முத்தம் என்பதும், அவர்களை பொருத்த வரை கை குலுக்குவது போல மிக சாதாரணமாக தான் பார்க்கப்படுகிறது.

முத்தம் தருவதில் மன்னன்

தமிழ் சினிமாவில் உலக நாயகன் கமல்ஹாசனுக்கு புன்னகை மன்னன் மட்டுமல்ல, உதட்டு முத்தம் தருவதில் மன்னன் என்ற பட்டப் பெயரும் உண்டு.

புன்னகை மன்னன் படத்தில் நடிகை ரேகாவுக்கு உதட்டு முத்தம் தந்திருப்பார் கமல்.

என்னிடம் சொல்லாமல், முன் அறிவிப்பின்றி சின்னப் பெண்ணான எனக்கு கமல் உதட்டு முத்தம் தந்துவிட்டார் என, 35 ஆண்டுகளுக்கு பின்பு இப்போதும் நேர்காணலில் புகார் சொல்லி வருகிறார் நடிகை ரேகா.

இப்போது நடிகர்களை விட, நடிகைகள் முன்னேறி விட்டனர். லியோ படத்தில் விஜய்க்கு முதலில் லிப்லாக் கிஸ் அடித்தவர் திரிஷா தான்.

ஐந்து நடிகர்கள்…

ஆனால் கதாநாயகி முத்தம் தர சம்மதித்தும், இன்றைய இளம் ஹீரோக்கள் சிலர் மறுத்து இருக்கின்றனர். ஹீரோவாக இருந்தாலும், கேமரா முன்பு உதட்டு முத்தம் தர மறுத்த ஐந்து நடிகர்கள் யாரென தெரிந்துக்கொள்வோம்.

உதயநிதி ஸ்டாலின்

நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடித்த படம் கலகத்தலைவர். இந்த படத்தில் நாயகி நிதி அகர்வால், உதட்டு முத்தம் காட்சி இருந்திருக்கிறது. நிதி அகர்வால் ஓகே சொன்ன பிறகும். அதற்கு மறுத்து விட்டார் உதயநிதி ஸ்டாலின். அதன்பின் அந்த சீன் சீட் பண்ணி எடுக்கப்படடுள்ளது.

சிபிராஜ்

அடுத்து நடிகர் சிபிராஜ் நடித்த சத்யா படத்தில், முத்தக்காட்சி இருந்துள்ளது. உதட்டு முத்தம் தர கதாநாயகி ரம்யா நம்பீசன் ஓகே சொன்ன நிலையில், கதாநாயகன் சிபிராஜ் மறுத்துவிட்டார். என் பையனுக்கு நான்தான் ஹீரோ. அவன் எ்ன்னை பார்த்து கெட்டுப் போயிடக் கூடாது என மறுத்து விட்டார்.

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி, திரிஷா நடித்த 96 படத்தில், கடைசி சீனில் கிளைமேக்ஸில் உதட்டு முத்தக்காட்சி தர திரிஷா ஓகே சொல்லி இருக்கிறார். ஆனால் படத்தில் அது நன்றாக இருக்காது என, லிப்லாக்கு காட்சிக்கு நோ சொல்லி விட்டார் விஜய் சேதுபதி

சிவகார்த்திகேயன்

அடுத்து ரெமோ, பிரின்ஸ் படங்களில் நடித்த போது அந்த படங்களில் கதாநாயகிகளுடன் லிப்லாக் சீன்களில் நடிக்குமாறு சிவகார்த்திகேயனிடம் டைரக்டர்கள் கூறி இருக்கின்றனர். ஹீரோயின்கள் ஓகே சொன்ன நிலையில், அப்பா, ஆள விடுங்கடா சாமி என மறுத்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.

சூர்யா

அடுத்து நடிகர் சூர்யா நடித்த மாற்றான் படத்தில், சூர்யாவுக்கும், காஜலுக்கும் லிப்லாக் காட்சி இருந்துள்ளது. காஜல் நடிக்க சம்மதித்த நிலையில் சூர்யா மறுத்துவிட்டதால், பிறகு விஎப்எக்ஸ் மூலம் அந்த முத்தக்காட்சி எடுக்கப்பட்டுள்ளது.

இப்படி ஐந்து முன்னணி ஹீரோக்கள், நடிகைகள் சம்மதித்தும் முத்தக்காட்சியில் நடிக்க நோ சொல்லி மறுத்துள்ளனர்.