ஹாலிவுட் பிரபலங்களை சிலிர்க்க வைத்த வலிமை மேக்கிங் வீடியோ – என்ன சொல்லி இருக்காங்க பாருங்க..!

போனி கபூர் தயாரிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் வலிமை. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. பின்னணி இசை உள்ளிட்ட வேலைகளில் படக்குழு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. ‘வலிமை’ படம் அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. வெளியீட்டுக்கு ஒரு மாதமே எஞ்சி உள்ளதால், படத்தின் அப்டேட்டுக்களும் அடுத்தடுத்து வெளியான வண்ணம் உள்ளன.

ஏற்கனவே இப்படடத்தின் டீசர், பாடல்கள் ஆகியவை வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ‘வலிமை’ படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிடது. இதில் வலிமை படம் எத்தனை தடைகளைக் கடந்து வந்தது. இப்படத்தின் படப்பிடிப்பின் போது நிகழ்ந்த விபத்து மற்றும் கொரோனா ஊரடங்கால் இப்படம் சந்தித்த பிரச்சனைகள் உள்ளிட்டவற்றை உணர்வுப்பூர்வமாக தொகுத்து இந்த மேக்கிங் வீடியோவை உருவாக்கி இருந்தனர். மேலும் அஜித் உயிரை பணயம் வைத்து செய்த ஸ்டண்ட் காட்சிகளுக்கு மிகப்பெரிய வரவேற்ப்பும் கிடைத்தது.

இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி ரஷ்யாவில் பட மாக்கப்பட்டது என்பது அனைவரும் அறிந்த செய்தி, குறிப்பாக ராக் (aka) ட்வெய்ன் ஜான்சன் மற்றும் WWE ஜான் சீனா ஆகியோர் படங்களில் பணியாற்றிய ஹாலிவுட் ஸ்டண்ட் கலைஞர்கள் இந்த படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் பணியாற்றியுள்ளனர். படப்பிடிப்பு தளத்தில் அவர்களுடன் பல விஷயங்களை கலந்து பேசியுள்ளார் அஜித்.

இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்த மேக்கிங் வீடியோவை பார்த்த அந்த ஹாலிவுட் ஸ்டண்ட் கலைஞர்கள், மெய் சிலிர்த்து போய் விட்டோம் என அஜித்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.  இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

---- Advertisement ----

---- Advertisement ----