“புளித்த இட்லி மாவு இருக்கா..!” அத வெச்சு உப்புப் படிந்த பக்கெட்டை கிளீன் பண்ணலாமா?

இனி கை வலிக்க பாத்ரூமில் இருக்கக்கூடிய பக்கெட்டை நீங்கள் தேய்க்க வேண்டிய அவசியமே இல்லை. கீழே கொடுக்கப்பட்டிருக்கக் கூடிய ஐடியாவை பயன்படுத்தினால் உங்கள் வீட்டில் உப்புப் படிந்த நிலையில் இருக்கும் பக்கெட் புது பக்கெட் போல் பளபளக்கும்.

பாத்ரூமில் இருக்கக்கூடிய பக்கெட் தண்ணீர் புழக்கம் அதிகமாக இருக்கக்கூடிய இடத்தில் இருப்பதால் ஒரு வாரத்திலேயே பார்ப்பதற்கு மிகவும் அசிங்கமான தோற்றத்தில் இருப்பதோடு மட்டுமல்லாமல் அதை எவ்வளவு சுத்தம் செய்தாலும் அதில் இருக்கும் கரை நீங்காமல் அப்படியே இருக்கும். அப்படிப்பட்ட கரையை எளிதில் நீக்கக்கூடிய டிப்ஸை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

பாத்ரூம் பக்கெட்டில் இருக்கும் உப்பு கரையை எளிதில் நீக்கக்கூடிய முறை

வைரத்தை வைரத்தைக் கொண்டு அறுப்பது போல உப்பு கரை படிந்த பக்கெட் உப்பைக் கொண்டு புளித்த இட்லி மாவை கொண்டும் எளிதில் சுத்தப்படுத்தலாம்.

இதற்காக நீங்கள் உங்கள் வீட்டில் இருக்கும் புளித்த மாவை சிறிதளவு எடுத்து அதனோடு உப்பினைக் கலந்து உங்கள் உப்பு படிந்த பக்கெட்டில் நன்கு தேய்த்து அப்படியே விட்டு விடுங்கள். பிறகு இரும்பு ஸ்கிராபரைக் கொண்டு கால் மணி நேரம் கழித்து நீங்கள் அழுத்தி தேய்த்து கழுவுங்கள்.

 இப்போது உங்கள் பக்கத்தில் படிந்திருக்கும் உப்பு கரை எளிதாக நீங்கி புதிய பக்கெட் போல் காட்சி அளிக்கும்.மேலும் பிளாஸ்டிக் பக்கெட் என்பதால் நீங்கள் இரும்பு ஸ்கார்பரை அதிகளவு அழுத்தம் கொடுத்து தேய்க்க வேண்டாம்.

---- Advertisement ----

 அப்படி தேய்க்கும் போது அதில் கீரைகள் விழுவதற்கான வாய்ப்புகள் உள்ளது .எனவே நீங்கள் தேங்காய் மஞ்சியை கூட இதற்காக பயன்படுத்தலாம்.

இந்த முறையை நீங்கள் பயன்படுத்தி உங்கள் வீட்டில் இருக்கும் பக்கெட்டுகளை சுத்தம் செய்து ரிசல்ட் எப்படி உள்ளது என்பதை பற்றி எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

மேலும் இந்த புளித்த மாவு மற்றும் உப்பினை கொண்டு உங்கள் வீட்டில் இருக்கும் தண்ணீர் குழாய்களில் படிந்து இருக்கக்கூடிய உப்பு கரைகளையும் எளிதாக நீக்க முடியும்.அதற்கும் இந்த முறையை நீங்கள் பயன்படுத்தினால் போதுமானது.

---- Advertisement ----