“விந்தணு குறைபாடு இருக்கிறதா..!” – அத அதிகரிக்க இப்படி செய்யுங்க..!

விந்தணு குறைபாடு: இன்று பெரும்பாலும் பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களுக்கும் குழந்தை பெற்றுக் கொள்வதில் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதற்கு காரணம் நம் உண்ணக்கூடிய உணவு முறையில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் மற்றும் பழக்க வழக்கங்கள் என்று கூறினால் அது மிகையாகாது.

அந்த வகையில் இன்று ஆண்கள் மத்தியில் அதிகரித்திருக்கக்கூடிய பிரச்சனை விந்தணு குறைபாடு என்று கூறுகிறார்கள். ஒரு ஆரோக்கியமான ஆணின் விந்துவில் மில்லியன் கணக்கில் விந்தணுக்கள் இருக்கும். இதில் ஒரு விந்தணு கருமுட்டையை அடையும் போது தான் பெண்களுக்கு கர்ப்பம் என்ற நிலை ஏற்படுகிறது.

Increase sperm count

எனவே அப்படிப்பட்ட விந்தணுவை அதிகரிக்க என்ன செய்யலாம் என்பதை பற்றி இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

தரமான விந்தணு

நீண்ட நாட்களாக குழந்தை கிடைக்கவில்லை என்று கவலைப்படுபவர்கள் கட்டாயம் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது அவசியமாகும். அப்போது ஆண்களுக்கு விந்துக்களின் எண்ணிக்கை அவற்றின் தரம் போன்றவற்றை பரிசோதனை செய்து பார்ப்பார்கள். அதில் 1 எம்எல் விந்துவில் 15 லட்சத்துக்கு குறைவாக விந்தணுக்கள் இருந்தால் கட்டாயம் நீங்கள் சிகிச்சை பெற்றுக் கொள்வது நல்லது.

Increase sperm count

விந்தணு உற்பத்தியை அதிகரிக்க கூடிய எளிய வழிகள்

நாம் அன்றாடம் உண்ணக்கூடிய உணவின் மூலமும் நமது பழக்க வழக்கத்தை சின்ன சின்ன மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்வதின் மூலம் உங்கள் விந்தணுவின் உற்பத்தியை அதிகரித்து கொள்ளலாம்.

---- Advertisement ----

அந்த வரிசையில் நீங்கள் தினமும் உடற்பயிற்சி செய்வது உடலுக்கு மட்டுமல்லாமல் விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்த உதவுவதாக பல ஆய்வுகள் கூறுகிறது.

Increase sperm count

புகைப்பிடிப்பது, மது அருந்துவது போன்ற கெட்ட பழக்கங்கள் இருந்தால் அவற்றை உடனே நிறுத்தி விடுங்கள். இதன் மூலம் உங்கள் விந்தணு எண்ணிக்கை குறையும் என்று நிரூபித்து இருக்கிறார்கள்.

மேலும் இறுக்கமான உள்ளாடை அணிவதை தவிர்த்து விட்டு லூசாக இருக்கும் டிரவுசர்களை அணிவது மிகவும் நல்லது. இதன் மூலம் உங்கள் விந்தணுக்களின் எண்ணிக்கையை நீங்கள் சிறப்பாக வைத்துக் கொள்ளலாம்.

நீங்கள் அதிகப்படியான மன அழுத்தத்தில் இருந்தாலும் விந்தணுக்களின் எண்ணிக்கை குறையுமாம். எனவே மன அழுத்தத்தை குறைக்க தியானத்தில் ஈடுபடுங்கள்.

Increase sperm count

விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பருப்பு வகைகள், இறைச்சி, வைட்டமின் டி அதிகம் இருக்கக்கூடிய உணவுகளை சேர்த்துக் கொள்வது மிகவும் சிறப்பானதாகும்.

மேலும் கட்டாயம் நீங்கள் உடல் எடை அதிகமாக இருந்தால் அதுவும் உங்கள் விந்தணு எண்ணிக்கையில் பிரச்சனை செய்யும். எனவே உடலில் கொழுப்பு சேர்வதால் உங்களுடைய டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைந்து உடல் உறவு செயல்பாட்டை குறைத்து விடும்.

எனவே மேற்கூறிய கருத்துக்களை கண்ணும் கருத்துமாக நீங்கள் ஃபாலோ செய்வதின் மூலம் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ள முடியும்.

---- Advertisement ----