“கோடையில் அடுப்படியில் இப்படி சமைத்தால் ..!” – வெப்பத்திலிருந்து தப்பிக்கலாம்..!

கோடை காலம் என்றாலே வெயிலின் கொடுமை தாங்கிக்கொள்ள முடியாத அளவு இருக்கு.ம் அது போன்ற நாட்களில் உங்கள் சமையலறையில் நீங்கள் அடுப்போடு நின்று சமைக்கும் போது மிகவும் கஷ்டமாகவும், சிரமமாகவும் இருப்பதோடு நீண்ட நேரம் நிற்பதில் உங்களுக்கு தடுமாற்றம் ஏற்படும்.

அப்படிப்பட்ட சூழ்நிலையில் உங்கள் சமையல் அறையை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளவும், எளிதில் சமையலை முடிக்கவும் என்னென்ன செய்யலாம் என்பதை பற்றி விரிவாக இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

கோடை காலத்தில் நீங்கள் விரைவில் தயாராக கூடிய உணவுப் பொருட்களை தயாரிப்பது அதிக வெப்பத்திலிருந்து உங்களை தற்காத்துக் கொள்ள உதவும். எனவே நீங்கள் நீண்ட நேரம் சமையல் அறையில் நிற்பது தவிர்க்கப்படும்.

புரோட்டின் உணவுகளை எளிதில் சமைத்து விடலாம் .அது விரைவில் வேகக்கூடிய தன்மை இருப்பதால் நீங்கள் எளிதில் வேகக்கூடிய காய்கறிகளை தேர்ந்தெடுத்து சமையல் செய்யவும்.

சமையல் செய்யும்போது கட்டாயம் சமையல் அறையில் இருக்கக்கூடிய ஜன்னல்களை திறந்து விடுவதின் மூலம் காற்றோட்டம் ஏற்பட்டு உங்களுக்கு வெப்பத்தினால் ஏற்படக்கூடிய தாக்கம் சற்றே குறையும்.

இன்று கிடைக்கக்கூடிய கைக்கடக்கமான மின்விசிறிகளை நீங்கள் பயன்படுத்தி உங்கள் சமையல் அறையில் நீங்கள் சமைக்கலாம். மேலும் சமையல் அறையில் ஃபேன் போன்ற உபகரணங்கள் இருந்தால் அதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

கோடை காலத்தில் சமையலறையில் சமைப்பதை விட வெளிப்பகுதிகளில் சமைப்பதற்கு வாய்ப்பு இருந்தால் நீங்கள் அப்படி சமைக்கலாம். வீட்டு மொட்டை மாடிகளில் கூட நீங்கள் சின்ன அடுப்பை பயன்படுத்தி சமையல் செய்வது எளிதாக இருக்கும்.

சிறிய எளிதில் சூடு பிடிக்கக்கூடிய பாத்திரங்களை பயன்படுத்துவதன் மூலம் விரைவாக நீங்கள் சமையலை பண்ண முடியும்.

நீங்கள் நிறைய தண்ணீர், குளிர் பானங்கள், பழ சாறுகள் ஆகியவற்றை நீங்கள் சமைக்கும்போது எடுத்துக் கொள்ளலாம். இது உங்களை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளும்.

எனவே இந்த கோடைகாலத்தை நீங்கள் வெயிலில் இருந்து உங்களை காப்பாற்றிக் கொள்ள, சமையல் அறையில் சமைக்கும் போது கூறப்பட்டிருக்கும் டிப்ஸை ஃபாலோ செய்வதின் மூலம் வெப்பத்திலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

   

--Advertisement--