Breaking News

உங்கள் ஆரோக்கியமே முக்கியம்..!

உங்கள் ஆரோக்கியத்தைப் பேணுவதற்காக தினமும் நீங்கள் 3 லிட்டர் தண்ணீரை அருந்த வேண்டும். கட்டாயமாக அரைமணிநேரம் உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். ஒரு மனிதனுக்கு நல்ல உடற்பயிற்சி என்றால் அது நடைப்பயிற்சி என்று தான் கூற வேண்டும். அரை மணி நேரம் நடப்பதால் உங்கள் உச்சி முதல் பாதம் வரை புத்துணர்வு ஏற்படும்.

ஞாபகசக்தியை கொடுக்கக்கூடிய ஊட்டச்சத்துக்களை எடுத்துக் கொள்வதின் மூலம் உடல் ஆரோக்கியத்தோடு நீங்கள் பணி செய்யும் திறனையும் இவை கூட்டும்.

ஆரோக்கியத்தைப் பேணும் போது அதிக அளவு நமது பாரம்பரிய உணவுகளை எடுத்துக்கொள்வது நலம். துரித உணவுகளைத் தவிர்த்துவிடுங்கள் நமது உடல்நலத்திற்கு நன்மை பயக்கும். அதுமட்டுமல்லாது உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய மைதா வெள்ளை சர்க்கரை போன்றவற்றை  தவிர்த்து வெல்லம் நாட்டுச் சர்க்கரை போன்றவற்றை பயன்படுத்துவதின் மூலம் உடலில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.

 மேலும் சிறுதானியங்களை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் கூடுதலாக ஊட்டச்சத்தும் நோய் எதிர்ப்பு சக்தியும் இயற்கையாகவே நமக்கு கிடைக்கும்.வேலைக்கு செல்பவர்கள் மதிய வேளைகளில் மிக எளிதில் பரோட்டாவை உண்ணுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள் இது வயதாகும் போது அவர்களுக்கு கட்டாய சர்க்கரை வியாதியை கொடுக்கக் கூடிய சூழ்நிலையை உருவாக்கும் என்பதை உணர்ந்து அது போன்ற உணவுகளை தவிர்த்துவிட்டு கம்மங்கூழ், ராகிக்ககூழ் போன்றவற்றை குடிப்பது மிகவும் நல்லது.

வாரம் இருமுறை எல்லா வகையான பழங்களையும் குறிப்பாக நமது நாட்டில் விளையக்கூடிய பழங்களை எடுத்துக்கொள்வது மிகவும் சிறப்பு வாய்ந்தது. இவர்கள் உடலுக்கு தேவையான வைட்டமின்களும் தாதுக்களும் மிக எளிதில் கிடைக்கும்.

மனிதன் ஆரோக்கியமாகவும் புத்துணர்வுடனும் இருந்தால்தான் அந்த இலக்கை எளிதாக கால நேரத்தில் அடைய முடியும். அவர்களின் மனதையும் உடலையும் ஒருமுகப்படுத்தி புத்துணர்வையும் உடல் ஆரோக்கியத்தையும் பேண கூடிய யோகா கலையை கற்றுக்கொண்டு தினமும் காலை, மாலை இரு நேரமும் செய்து வருவது மிகவும் நல்லது. அதுமட்டுமல்லாது மிகவும் இறுக்கமான மனநிலை உள்ள நேரங்களில் மெல்லிசையை கேட்பது, இசையில் உங்களை ஐக்கியப்படுத்திக் கொள்வது உங்களை மன அழுத்தத்தில் இருந்து விடுவிக்க கூடிய அரிய மருந்து என்று கூட சொல்லலாம்.

---- Advertisement ----

Check Also

பிரபல சின்னத்திரை நடிகருக்கு கேன்சர்.. தழுதழுத்த குரலில் வீடியோ வெளியிட்ட மகள்..!

சின்னத்திரையில் நடிக்கின்ற நடிகர்களுக்கு தற்போது மக்கள் மத்தியில் பெருமளவு பிரபலம் கிடைத்து வருவது உங்களுக்கு அறிந்த விஷயங்கள் ஒன்றுதான். அந்த …