“சுட சுட சுவையான பிரட் அல்வா..!” – உங்க கையால செஞ்சு அசத்துங்க..!

பல வகையான அல்வாக்களை பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். அதாவது கோதுமை அல்வா, பைனாப்பிள் அல்வா, ஆப்பிள் அல்வா, மைதா மாவு அல்வா, தேங்காய் அல்வா இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

திருநெல்வேலி அல்வாவை விட  சிறந்த ஒரு சுவையான பிரட் அல்வாவை எப்படி செய்ய வேண்டும் என்பதைப் பற்றிய பதிவினை இந்த கட்டுரையில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

இந்த அல்வாவை சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு சுவையான அல்வாவாக எப்படி செய்வது அதற்கு  தேவையான பொருட்கள் என்ன என்பதைப் பற்றி இனி பார்க்கலாம் .

பிரட் அல்வா செய்ய தேவையான பொருட்கள்

1.சர்க்கரை 150 கிராம்

2.நெய் 100 கிராம்

--Advertisement--

3.முந்திரி 50 கிராம்

4.பிரட் பத்து துண்டுகள்

செய்முறை

முதலில் பிரட்டை பிரித்து எடுத்துவிட்டு பிரட்டை சின்ன சின்ன துண்டுகளாக கட் பண்ணி கொள்ளவும். பின்னர் கடாயை அடுப்பில் வைத்து நெய்யை ஊற்றி அது உருகும் வரை அடுப்பை சிம்மில் வைக்க வேண்டும்.

 பிறகு நெய்யில் முந்திரிப் பருப்புகளை போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதனை அடுத்து எடுத்து வைத்திருக்கும் அதே கடாயில் பிரட் துண்டுகளை போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

பிறகு அதில் இரண்டு கப் அளவு காய்ச்சிய பாலை அந்த பிரட் துண்டுகள் மூங்கும் அளவுக்கு ஊற்ற வேண்டும். மேலும் வறுத்து வைத்துள்ள முந்திரியில் பாதி அளவு எடுத்து மிக்ஸியில் பொடியாக்கிக்கொண்டு அதில் ஊற வைத்த பிரட்டை சேர்த்து கொள்ள வேண்டும்.

பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் சர்க்கரை மற்றும் மிக்ஸியில் அரைத்த பிரட்டு மற்றும் முந்திரிக் கலவையை சேர்த்து நன்கு கிளறவும்.

 அது நன்றாக சுருண்டு வரும்போது மீதமுள்ள முந்திரிகளை சேர்த்து மீண்டும் நெய்யை விட்டு நல்ல முறையில் சுருட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

இப்போது நீங்கள் சுவைத்துப் பார்க்கக்கூடிய பிரட் அல்வா ரெடி ஆகிவிட்டது உங்கள் வீட்டில் இருப்போருக்கு சிறுசிறு கிண்ணங்களில் இந்த அல்வாவை போட்டு முந்திரிப் பருப்பை மேலே வைத்து அழகாக டெக்கரேஷன் செய்து கொடுப்பதின் மூலம் அவர்கள் பார்க்கும்போதே நாவில் எச்சில் கூறக்கூடிய வகையில் எந்த பண்டம் இருக்கும்.

மேலும் குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய எந்த பிரெட் அல்வாவை நீங்கள் செய்து அசத்தி விடலாம். நீங்களும் இதை உங்கள் வீட்டில் ஒரு முறை ட்ரை செய்து பார்த்து உங்களுக்கு ஏற்படும் அனுபவத்தை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.