சின்ன வெங்காய குழம்பு செய்வது எப்படி

மதிய வேளையில் என்ன குழம்பு வைப்பதென்றே தெரியவில்லையா? உங்கள் வீட்டில் சின்ன வெங்காயத்தை தவிர காய்கறி எதுவும் இல்லையா? அப்படியானால் அந்த சின்ன வெங்காயத்தைக் கொண்டே சுவையான மற்றும் சிம்பிளான குழம்பு செய்யலாம். இந்த சின்ன வெங்காய குழம்பு சாதத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். குறிப்பாக இது செய்வது மிகவும் சுலபம். எனவே இதை பேச்சுலர்களும் முயற்சிக்கலாம்.

உங்களுக்கும் சின்ன வெங்காய குழம்பு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கிழே சின்ன வெங்காய குழம்பின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:


* எண்ணெய் – 1/4 கப்
* வெங்காய வடகம் – 6 (விருப்பமிருந்தால்)
* சின்ன வெங்காயம் – 20 (தோலுரித்தது)
* புளிச்சாறு – 4 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் – தேவையான அளவு
* உப்பு – சுவைக்கேற்ப
* சர்க்கரை/வெல்லம் – 1 டீஸ்பூன்

வறுத்து அரைப்பதற்கு:


* எண்ணெய் – 1 டீஸ்பூன்
* வரமிளகாய் – 6-8
* மல்லி – 3 டேபிள் ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்
* துவரம் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்
* வெந்தயம் – 1 டீஸ்பூன்
* சீரகம் – 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் – 1/2 டீஸ்பூன்

செய்முறை:


* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு, சிறிது நீர் ஊற்றி பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/4 கப் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காய வடகம் சேர்த்து வறுத்து, அதை தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

 

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

பத்து வருஷம் ஆச்சு.. ஆனா.. இன்னும் அது தெரியல.. கூச்சமின்றி கூறிய கயல் ஆனந்தி..!

பத்து வருஷம் ஆச்சு.. ஆனா.. இன்னும் அது தெரியல.. கூச்சமின்றி கூறிய கயல் ஆனந்தி..!

சினிமாவில் சில படங்களில் நடித்தாலும், சில நடிகைகளை ரசிகர்களால் மறக்கவே முடியாது. அப்படிப்பட்ட ஒரு வசீகரமான நடிகையாக ரசிகர்களின் மனம் …