“வீட்டில் செய்யும் தோசை மொறு மொறுப்பாக..!” – சில டிப்ஸ்..!

தோசை என்ற உணவு பெரும்பாலான நாடுகளிலும் இன்று கிடைக்கிறது. எனினும் இந்த தோசையில் பல வகைகளை சுவைத்திருந்தாலும், தோசை  மொறு மொறு என்று இருந்தால் தான் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பிடிக்கும். அப்படி மொறு மொறு தோசையை எப்படி  செய்யலாம் என்பதை பற்றிய சில குறிப்புகளை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

crispy Dosa

மொறு மொறு தோசைக்கான டிப்ஸ்

நீங்கள் செய்யும் தோசை வீட்டில் மொறு மொறு என ஹோட்டல் ஸ்டைலில் வர தோசை வார்ப்பதற்கு முன்பு ஒரு கப் ரவையை தோசை மாவோடு கலந்து விடுங்கள். பிறகு அரை மணி நேரம் கழித்து இந்த தோசை மாவை தோசையாக ஊற்றும் போது மொறு மொறுவென வந்துவிடும்.

crispy Dosa

மேலும் தோசை மாவை அரைக்கும் போது நீங்கள் அரிசி, உளுந்துடன் ஒரு கைப்பிடி அளவு அவலை சுத்தம் செய்து சேர்த்து அரைத்து விட்டீர்கள் என்றால் தோசை பொன் நிறமாகவும், தோசை மொறு மொறு என கூடுதல் சுவையோடும் இருக்கும்.

தோசை மாவுக்கு தேவையான பொருட்களை அளந்தெடுத்து ஊற வைப்பதில் தொடங்கி, அதை பக்குவமாக நீங்கள் அரைக்கும் போது உங்கள் வீட்டு தோசை மொறு மொறுப்பாக இருக்கும் என்பதை புரிந்து கொண்டு அந்த வழிமுறையை பின்பற்றுங்கள்.

crispy Dosa

தோசை மாவினை அரைக்கும் போது அதிக அளவு நீங்கள் தண்ணீர் சேர்க்கக்கூடாது. அளவாக தண்ணீரை சேர்த்து பக்குவமாக அரைப்பதின் மூலம் தோசை மாவு நன்றாக இருக்கும். மேலும் தோசையும் மொறு மொறுப்பாக வரும்.

---- Advertisement ----

தோசை  மாவு சற்று  புளித்திருந்தால் மட்டுமே தோசை மொறு மொறுப்பாக வரும். எனவே குறைந்த பட்சம் 6 மணி முதல் 8 மணி நேரம் வரை நீங்கள் மாவினை புளிக்க விடுவது மிகவும் நல்லது.

crispy Dosa

தோசை மாவு நீர்க்கவோ அல்லது கெட்டியாகவோ இருக்கக் கூடாது .அப்படி இருந்தால் தோசை சரியாக வராது. எனவே தோசை மாவு தயாரிக்கும் போது நீங்கள் பக்குவமாக மாவை அரைத்து எடுக்க வேண்டும்.

எனது மேற்கூறிய இந்த குறிப்புக்களை நீங்கள் தோசை அரைக்கும் போது பயன்படுத்தி உங்கள் வீட்டிலும் ஹோட்டல் பக்குவத்தில் மொறு மொறு தோசையை செய்து அசத்தலாம்.

---- Advertisement ----