“ஜஸ்ட் ஒரு கப் இட்லி மாவு இருந்தா..! – இந்த வடை-யை சுட்டு சுவைக்கலாம்..!!

மெது மெது என்று வடை-யை செய்வதற்கு இனிமேல் உளுந்து மாவை ஊற வைத்து மாங்கு மாங்கு என்று அரைத்து சிரமப்பட வேண்டிய அவசியமே இல்லை. அதற்கு பதிலாக நீங்கள் உங்கள் வீட்டில் ஒரு கப் இட்லி மாவு இருந்தாலே போதும். அதை வைத்துக்கொண்டு எளிதாக நீங்கள் வடை செய்து அசத்தலாம்.

idli-batter-bonda

இனி இந்த கட்டுரையில் ஒரு கப் இட்லி மாவை கொண்டு எப்படி மெதுவடை செய்யலாம் என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

வடை செய்ய தேவையான பொருட்கள்

1.ஒரு நாள் மட்டுமே வைத்திருந்து புளித்த இட்லி மாவு ஒரு கப்

2.அரிசி மாவு கால் கப்

3.மிளகு 10

---- Advertisement ----

4.சீரகம் அரை டீஸ்பூன்

5.இஞ்சி துருவல் அரை டீஸ்பூன்

6.பொடியாக நறுக்கிய வெங்காயம் ஒரு கப்

7.பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் இரண்டு

8.கருவேப்பிலை கொத்தமல்லி பொடியாக நறுக்கியது

9.தேவையான அளவு உப்பு

செய்முறை

idli-batter-bonda

நீங்கள் எடுத்து வைத்திருக்கும் ஒரு நாள் புளித்த இட்லி மாவை ஒரு கடாயில் ஊற்றிக் கொள்ளுங்கள். அதனை அடுத்து நீங்கள் எந்த அளவு இட்லி மாவு எடுத்தீர்களோ அந்த கப்பில் அதே அளவு தண்ணீரை இட்லி மாவில் ஊற்றி நன்கு கலந்து இதனை அடுப்பில் வைத்து சூடு படுத்த வேண்டும்.

மாவு ஒரு கொதி வந்தவுடன் கெட்டியாகும். சமயத்தில் இதில் கால் கப் அளவு அரிசி மாவை போட்டு ஸ்விம்மில் வைத்து நன்கு கிளறி விடுங்கள். நீங்கள் கிளறும் போது மாவு கட்டி சேராமல் இருப்பது மிகவும் அவசியமாகும். இதனை அடுத்து மாவு வெந்து கெட்டியாக மாறக்கூடிய நிலையில் தேவையான அளவு உப்பை போட்டு விடுங்கள்.

இப்போது கொழுக்கட்டை மாவுக்கு நாம் எப்படி மாவினை தயாரிப்போமோ அது போலவே அடுப்பை அணைத்துவிட்டு இதில் மிளகு, சீரகம் இஞ்சி துருவல் நறுக்கிய வெங்காயம், கருவேப்பிலை கொத்தமல்லி போன்றவற்றை போட்டு நன்கு பிசைந்து கலந்து விடவும்.

idli-batter-bonda

உங்கள் கை பொறுக்கும் சூட்டில் இந்த மாவை பிசைந்து தயார் செய்த உடன் மாவினை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து உங்கள் உள்ளங்கையில் தட்டி மெதுவாக ஓட்டையை போட்டு ஒரு தட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.

பிறகு அடுப்பில் வானிலையில் எண்ணெய் ஊற்றி சூடேற்றுங்கள். எண்ணெய் சூடான பிறகு நீங்கள் தட்டி வைத்திருக்கும் அந்த வடையை அப்படியே எண்ணெய்க்குள் போட்டு பொரித்து எடுக்கவும்.

பொன் நிறமாக வடை மாறிய பிறகு நீங்கள் எடுத்து சாப்பிட்டால் மொறு மொறுவென மெதுவடை சாப்பிட மிக சுவையாக இருக்கும். மாலை நேரங்களில் தேநீர் குடிக்கும் போது இது போன்ற செம கிரிஸ்பியான வடையை நீங்கள் செய்து சாப்பிடுவதின் மூலம் உங்களுக்கு சில மணி நேரங்கள் பசி எடுக்காது.

---- Advertisement ----