ரோட்டுக்கடை Egg Fried Rice வீட்டிலேயே செய்யலாம்..! – எப்படி செய்வது..? – வாங்க பார்ப்போம்..!

தற்போது உள்ள பெரும்பாலான குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவு முட்டை ஃப்ரைடு ரைஸ் ( Egg Fried Rice ). ஆனால் இதனை கடைகளில் வாங்கி சாப்பிடுவது நல்லது அல்ல. எனவே ஆரோக்கியமான முறையில் வீட்டிலே டேஸ்டான முட்டை ஃப்ரைடு ரைஸ் எப்படி செய்வது என இந்த பதிவில் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

  1. முட்டை- 3
  2. வெங்காயம்- 3
  3. பூண்டு- 4 பல்
  4. இஞ்சி- ஒரு துண்டு
  5. எண்ணெய்- தேவையான அளவு
  6. வெங்காயத்தாள்- ஒரு கொத்து
  7. மிளகுத்தூள்- 1 தேக்கரண்டி
  8. குடை மிளகாய்- 1
  9. உப்பு- தேவையான அளவு

செய்முறை:

முட்டை ஃப்ரைடு ரைஸ் செய்வதற்கு முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றவும்.

எண்ணெய் காய்ந்ததும் முதலில் முட்டையை உடைத்து ஊற்றவும். ஊறியவுடன் ஒரு கரண்டியை வைத்து நன்கு கிளறி முட்டையை பிசிறி விடவும். முட்டை நன்கு வறுபட்ட பிறகு அதில் வெங்காயம், பூண்டு, இஞ்சி மற்றும் குடை மிளகாய் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வதக்கவும்.

அடுத்து நறுக்கிய வெங்காய தாள் சேர்த்து மேலும் வதக்கவும்.

பின்னர் உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து கிளறவும்.

வதக்கிய இந்த கலவையில் வடித்து ஆற வைத்த சாதத்தை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளறவும்.

இந்த நேரத்தில் அதில் உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து அடித்து வைக்கவும்.

இப்போது வேறொரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி முட்டை கலவையை அதில் போட்டு கிளறவும்.

இதனை சாதத்துடன் சேர்த்து கிளறி இறக்கினால் செம டேஸ்டான முட்டை ஃப்ரைடு ரைஸ் தயார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

முன் பக்கம் முழுசும் கூந்தல்.. பின்னாடி ஃபுல் ஓப்பன்.. “பிரம்மயுகம்” பெண் கதாபாத்திரம் பார்த்த வேலை..

முன் பக்கம் முழுசும் கூந்தல்.. பின்னாடி ஃபுல் ஓப்பன்.. “பிரம்மயுகம்” பெண் கதாபாத்திரம் பார்த்த வேலை..

மலையாளத்துறைகளில் சூப்பர் ஸ்டார் நடிகர் மம்முட்டி நடிப்பில் வெளி வந்த பிரம்மயுகம் திரைப்படம் தான் தற்போது டாக் ஆப் த …