“முகப்பரு இயற்கையாக விரட்ட..!” – வேப்பிலை போதும்..!

இன்று இருக்கும் பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களுக்கும் பெரும் தொல்லையாக இருப்பது முகப்பரு தான். இதற்கு தீர்வு வேண்டி பல வகைகளை கையாண்டாலும் சில வேளைகளில் கிடைக்கும் ரிசல்ட் அவ்வளவு சிறப்பாக இல்லை என்று தான் கூற வேண்டும்.

மேலும் முகப்பருவே இல்லாத முகம் வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இயற்கை கொடுத்த சில மூலிகைகளை பயன்படுத்தி நீங்கள் உங்களுக்கு ஏற்படும் முகப்பருவை எளிதில் நீக்கி விடுவதோடு மட்டுமல்லாமல் முகப்பரு தொல்லை இனி ஏற்படாமல் இருப்பதற்கு இது வழி வகை செய்யும்.

pimples
"முகப்பரு இயற்கையாக விரட்ட..!" - வேப்பிலை போதும்..!

அந்த வகையில் எண்ணெய் பசை சருமத்திற்கு நீங்கள் பயன்படுத்த வேண்டிய மூலிகை வேப்பிலைதான். இந்த வேப்பிலையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து அதில் மஞ்சள் மற்றும் புதினா சேர்த்து நன்கு அரைத்து அதை உங்கள் முகங்களில் தேய்த்து விடுங்கள்.

குறிப்பாக பருக்கள் இருக்கக்கூடிய பகுதியில் அதிகமாக தேய்த்து விட்டு 20 நிமிடங்கள் அப்படியே விட்டு விட வேண்டும். மேலும் வாரத்தில் ஒரு முறை இதுபோல செய்து விடுங்கள் 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ முகப்பரு எளிதில் மறையும்.

pimples
"முகப்பரு இயற்கையாக விரட்ட..!" - வேப்பிலை போதும்..!

இதே வேப்பிலையோடு தயிர் இரண்டு டீஸ்பூன், எலுமிச்சை சாறு சிறிதளவு கலந்து உங்கள் முகத்தில் தேய்த்து வர உலர்ந்த கருமம் இருப்பவர்களுக்கு ஏற்படும் முகப்பரு எளிதில் நீங்கும்.

சாதாரண சருமம் கொண்டவர்கள் வேப்பிலை, , மஞ்சள் சிறிதளவு இவற்றை ஒன்றாக அரைத்து உங்கள் முகத்தில் தடவி 20 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட வேண்டும். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவுவதின் மூலம் உங்கள் முகப்பரு விரைவில் நீங்கி முகம் பொலிவாகும்.

pimples
"முகப்பரு இயற்கையாக விரட்ட..!" - வேப்பிலை போதும்..!

முகம் முழுவதுமே முகப்பரு இருக்கிறது என்று கவலைப்படுபவர்கள் வேப்பிலையில் தண்ணீர் ஊற்றாமல் அரைத்து அந்த விழுதை ஒரு துணியில் கட்டி வடித்த பின் அதன் சாறை எடுத்து அதில் மஞ்சளை கலந்து சோற்றுக்கற்றாழை ஜெல்லையும் சேர்த்து முகத்தில் தடவி 30 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு பிறகு தண்ணீரில் கழுவி விடுங்கள். இவ்வாறு தொடர்ந்து செய்வதின் மூலம் உங்கள் முகப்பருக்கள் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

ஹார்மோன் பிரச்சனையால் ஏற்படும் முகப்பருவுக்கு வேப்பிலை சாரோடு அருகம்புல் சாறையும் சேர்த்து அதில் மஞ்சள் தூளையும் கலந்து உங்கள் முகத்தை பூசி கழுவி வர ஹார்மோன் பிரச்சனையால் ஏற்படும் முகப்பொருட்கள் விரைவில் நீங்கும்.