டிஜிட்டல் பண பரிவர்த்தனை தற்போது இந்தியாவில் சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டது என்று சொல்லலாம். இதெல்லாம் சாத்தியமா என்று கேட்டவர்களின் மத்தியில் தற்போது ரோட்டு கடையில் வியாபாரம் செய்பவர்கள் கூட பேடிஎம், ஜிபே, போன் பே முறையை பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள்.
அந்த வகையில் தற்போது ஏடிஎம் கார்டு தேவை இல்லை. இந்த முறையை நீங்கள் பயன்படுத்துவதன் மூலம் ஏடிஎம்மில் இருந்து எளிதாக பணம் எடுக்க முடியும். அட அது எப்படி ஏடிஎம் கார்டு இல்லாமல் ஏடிஎம்மில் இருந்து பணம் எடுப்பது என்று நீங்கள் சிந்திக்க வேண்டாம்.
அதற்கு உரிய ஈஸியான ஆப்பை பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் பணம் பெறக்கூடிய முறையை கீழே கொடுக்கப்பட்டிருக்கும் விவரங்களை தெரிந்து கொண்டு ஃபாலோ செய்து விடலாம்.
ஏடிஎம் கார்டை உள்ள வை குமாரு..
குமாரு இனி ஏடிஎம் இயந்திரங்களில் பணம் எடுப்பதற்கு கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு தேவை என்பது உங்கள் அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். ஆனால் தற்போது இந்த இரண்டு கார்டுகளும் இல்லாமல் கார்டுலேஷ் வித்ராவல் என்று அழைக்கப்படும் ஐ சி சி டபிள்யூ முறையை மக்கள் பயன்படுத்துவதன் மூலம் பணத்தினை பெற முடியும்.
இனிமேல் நீங்கள் ஏடிஎம்மிற்கு சென்று அங்கு ஏடிஎம் கார்டு கொண்டு வரவில்லை என்று திரும்பி வர வேண்டிய அவசியமே இல்லை. நீங்கள் யூ பி ஐ ஆப்யை பயன்படுத்தி ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து பணத்தை எடுத்துக் கொள்ளக்கூடிய புதிய சேவை தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த முறையை இண்டர் ஆப்பரபிள் கார்டுலஸ் டாஷ் வித்ட்ராவல் (Interoperable Cardless Cash Withdrawal) ICCW என்று அழைக்கிறார்கள். எனவே இதனைப் பயன்படுத்தி உங்களால் எளிதில் பணத்தை எடுக்க முடியும்.
இனி பணம் எடுக்க இது போதும் வாங்க..
தற்போது இந்தியாவில் இருக்கும் வங்கி வாடிக்கையாளர்கள் யூ பி ஐ சேவையின் மூலம் ஏடிஎம் களிலிருந்து பணம் எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த சேவையை பல்வேறு வங்கிகளில் தற்போது வழங்கப்பட்டு வருகிறது.
இந்த செயல்முறையை பயன்படுத்துவதற்கு உங்களிடம் யூபிஐ ஆப்புடன் இயங்கக்கூடிய ஒரு ஸ்மார்ட் போன் இருந்தால் போதும். . மேலும் நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா யூபிஐ மூலம் இயக்கப்பட்ட வத்ராவல் முறைக்கு ஒப்புதல் அளித்துள்ளதை அடுத்து நீங்கள் டெபிட் கார்டை பயன்படுத்தாமலேயே பணம் எடுப்பதற்கு இது உதவி செய்கிறது.
மேலும் யூ பி ஐ முறையை பின்பற்றி க்யூ ஆர் கோட் ஸ்கேன் மற்றும் யூபிஐ பின் நம்பர் போன்ற அங்கீகாரங்களுடன் இது இயங்குகிறது. எனவே நீங்கள் ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்க யூபிஐ ஆப்பை எப்படி பயன்படுத்துவது என்பது பற்றி இனி தெரிந்து கொள்ளலாம்.
வாங்க தெரிஞ்சுக்கலாம்..
- இதற்காக ஏடிஎம் மிஷினின் டிஸ்ப்ளேவில் யுபிஐ கேஷ் வித்ட்ராவல் என்ற விருப்பத்தை நீங்கள் கிளிக் செய்யவும்.
- கிளிக் செய்த பின் உங்களுடைய தொகை எவ்வளவோ அதை உள்ளீடு செய்யவும்.
- இந்த முறையை பயன்படுத்தி நீங்கள் பத்தாயிரம் வரை மட்டும் தான் பணம் எடுக்க முடியும். எனவே பத்தாயிரத்திற்குள் நீங்கள் உங்கள் தொகையை முதலீடு செய்யலாம்.
- இப்போது உங்கள் ஏடிஎம் இன் திரையில் க்யூ ஆர் கோட் காட்டப்படும்.
- இந்தக் கோடினை உங்கள் செல்போனில் உள்ள யூ பி ஐ ஆப் மூலம் ஸ்கேன் செய்ய வேண்டும்.
- அப்படி ஸ்கேன் செய்து முடித்தவுடன் யுபிஐ ஆப்பின் பின் நம்பரை டைப் செய்யவும்.
- இதை நீங்கள் செய்து முடித்து விட்டால் உங்களுக்கு தேவையான பணம் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து வெளியே வந்து விடும்.
- இந்த யுபிஐ ஏடிஎம் பரிவர்த்தனையை செய்ய சுமார் 30 வினாடிகள் ஆகலாம். சிறிது காலதாமதம் ஏற்பட்டால் நீங்கள் பயம் அடைய வேண்டிய அவசியம் இல்லை.
- சிறிது நேரம் காத்திருந்தால் போதுமானது. இதன் மூலம் நீங்கள் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தாமல் உங்களுக்கு தேவையான பணத்தை எடுத்துக் கொள்ள முடியும்.
- எனவே இனி மேல் ஏடிஎம் மற்றும் டெபிட் கார்டு அட்டைகளின் தேவையை இது நீக்க முக்கிய பங்கு வகிக்கும் என்று சொல்லலாம். எனவே இனி மேல் கையில் காடில்லை என்ற கவலை உங்களுக்கு தேவையே இல்லை.