என்ன இவங்க சம்பளம் இவ்வளவா? நடிகர் சூர்யாவ விட அதிக சம்பளமா…

தமிழ் திரையுலகில் மிகவும் முக்கியமான இயக்குனர்களில் மணிரத்தினம் குறிப்பிடத்தக்கவர். இவர் படங்கள் குறிப்பிடத்தக்க விதத்தில் நேர்த்தியாகவும்  தொழில்நுட்ப ரீதியாக வித்தியாசமாக இருக்கும் படி எடுக்கக்கூடிய படங்களாக இருக்கும்.

இவரிடம் நிறைய உதவியாளர்களாக ஆண், பெண் இயக்குனர்கள் பணியாற்றி இருக்கிறார்கள். அந்த வரிசையில் சுதா கொங்கரா என்ற பெண் இயக்குனர்,  உதவி இயக்குனராக பல ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார். இவர் தமிழில் துரோகி மற்றும் இறுதிச்சுற்று படத்தை இயக்கியவர்.

அது மட்டும் அல்ல தமிழில் சக்கை போடு போட்ட  சூரரைப்போற்று படத்தின் இயக்குனர் இவர்தான் என்றால் உங்களுக்கு மிகச் சுலபமாக புரியும். இந்தப் படத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடித்திருந்தது அனைவரும் அறிந்ததே.

இந்த படத்தின் மூலம் ரசிகர்களின் மத்தியில் சுதாவிற்கு மிக நல்ல பெயர் உள்ளது.இந்தப் படத்துக்காக இவர் இரண்டு கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளார்.

ஓடிடியில் இந்த படம் வெளியாகி இருந்தாலும் மக்கள் மத்தியில் மிகச்சிறந்த பெயரை பெற்றதோடு சிறந்த இயக்குனர், சிறந்த படம், சிறந்த நடிகை, நடிகர் சிறந்த பின்னணி இசைக்காக ஐந்து தேசிய விருதுகளை அள்ளிக் குவித்தது.

---- Advertisement ----

அதிகமான விருதுகளை அள்ளி குவித்த   சூரரைப்போற்று படத்துக்குப் பின்னால் சுதா கொங்கராவிற்கு சம்பளம் மிக அதிக அளவு எகிரி உள்ளது என்று கூறலாம். சரி எந்த அளவு எகிரி இருக்கிறது என்று நீங்கள் எதிர்பார்ப்பது எனக்கு புரிந்தது. நடிகர் சூர்யா வாங்குவதை விட தற்போது அவர் ஹிந்தியில் ரீமேக் ஆகும்  இந்த சூரரைப்போற்று படத்திற்காக 25 கோடி சம்பளம் வாங்குகிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

இப்படத்திற்காக அரசு கொடுத்துள்ள  தேசிய விருது அங்கீகாரம் தான் இவருடைய வருவாய் பல மடங்கு உயர்ந்து விட்டது என்று அனைவரும் கூறுகிறார்கள். அதே சமயத்தில் அனைத்து முன்னணி நடிகர்களும் நடிகைகளும் இவரது இயக்கத்தில் நடிப்பதற்கு மிகுந்த ஆவலாக இருப்பதாக கூறுகிறார்கள்.

இதனை அடுத்து  நடிகர் சூர்யா தயாரிப்பில் மீண்டும் இவர்கள் இணைந்து படம் செய்வார்கள் என்ற ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் குறித்து அதிகாரப்பூர்வமான செய்திகள் ஏதும் வர இல்லை.எனினும் மீண்டும் இந்த கூட்டணி ஒரு வெற்றிப் படத்தை உருவாக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

---- Advertisement ----