தமிழ் சினிமாவின் தற்போது நட்சத்திர நடிகைகளில் ஒருவராக பார்க்கப்பட்டு வருபவர் தான் பிரியா பவானி சங்கர் .
இவர் திரை பின்பலம் எதுவுமே இல்லாத குடும்பத்தில் இருந்து பிறந்து வளர்ந்து முதன் முதலில் மீடியா உலகில் செய்தி வாசிப்பாளினியாக அறிமுகமானார்.
நடிகை பிரியா பவானி ஷங்கர்:
அதன் பிறகு அவருக்கு சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு தேடிவந்தது. கல்யாண முதல் காதல் வரை எனும் தொலைக்காட்சி தொடரில் நடித்ததன் மூலமாக பிரியா பவானி சங்கர் மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.
அந்த தொடர் இவருக்கு பெரும் அடையாளத்தையும் பெயரும் ஏற்படுத்திக் கொடுத்தது. இதன் மூலம் சீரியல் நடிகையாக இருந்து வந்த பிரியா பவானி சங்கர் ப்ரோமொட்டாகி திரைப்பட நடிகையானார் .
சினிமாவில் முதன்முதலில் மேயாத மான் திரைப்படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார். இந்த திரைப்படம் அவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை கொடுத்தது.
முதல் படத்திலிருந்து நல்ல பெயரெடுத்த பிரியா பவானி சங்கருக்கு தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாஃபியா, களத்தில் சந்திப்போம், கசடதபர, ஓமன பெண்ணே, யானை, குருதி ஆட்டம், திருச்சிற்றம்பலம், அகிலன் ,ருத்ரன் ,பொம்மை இப்படி பல்வேறு தொடர் வெற்றி திரைப்படங்களில் நடித்த வந்தார்.
அடுத்தடுத்த தோல்வியால் அவமானம்:
இதனிடையே சமீப காலமாக அவருக்கு பெரும் தோல்வி அடுத்தடுத்து ஏற்பட்டு வந்தது. இதனால் பிரியா பவானிசங்கர் மிகுந்த மன வருத்தத்திற்கு ஆளாகி இருந்தார்.
திருச்சிற்றம்பலம் திரைப்படம் வெற்றி அடைந்தது. ஆனால் அதில் அவரது கதாபாத்திரம் பெரிதாக பேசும்படி அமையவில்லை .
அதை எடுத்து அகிலன், 10 தல, ருத்ரன் , பொம்மை இப்படி பல திரைப்படங்கள் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்தது .
அது மட்டும் இல்லாமல் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இடையில் உருவாகிய இந்தியன் 2 திரைப்படமும் பெரும் தோல்வி அடைந்ததால் பிரியா பவானி ஷங்கரை பலரும் விமர்சித்து கலாய்க்க தொடங்கினர்.
இதுகுறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசி இருந்த பிரியா பவானி சங்கர் ஒரு படம் வெற்றி அடைந்தால் அதில் என்னை பாராட்டுவதற்கு ஆளில்லை.
ஆனால் ஒரு படம் தோல்வி அடைந்து விட்டால் அந்த முழு படத்தின் தோல்விக்கு காரணம் நான் தான் என கூறி விமர்சிக்கிறார்கள் என இது எந்த விதத்தில் நியாயம்? என கேள்வி எழுப்பி நடிகர் பிரியா பவானி சங்கர் மிகுந்த வருத்தத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
இந்த நிலையில் தொடர் தோல்விக்கு பிறகு நடிகர் பிரியா பவானி சங்கருக்கு டிமான்டி காலனி 2 திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்திருக்கிறது.
இனிமேல் தலை நிமிர்த்து நடங்க…
இத்திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. படத்திற்கு நல்ல வசூலும் கிடைத்த வருகிறது. இதனால் பிரியா பவானி சங்கர் மீண்டும் மகிழ்ச்சியில் இருக்கிறார்.
தொடர்ந்து ரசிகர்கள் பிரியா பவானி ஷங்கரை பாராட்டியும் வாழ்த்தியும் வருகிறார்கள். அதில் ஒரு நபர் டிமான்டி காலனி 2 பாசிட்டிவ் விமர்சனம் கிடைத்திருக்கிறது.
எனவே இனிமேல் நீங்கள் தலைநிமிர்ந்து நடங்க பிரியா…. நீங்க நடிச்ச படம் சூப்பர் ஹிட் ஆகி விட்டது என கூறி வீடியோ ஒன்றை எடிட் செய்து அவர் சந்தோஷமாக மகிழ்ச்சியாக இருப்பது போல் வெளியிட்டு வாழ்த்து இருக்கிறார்.
இந்த வீடியோவுக்கு பதில் அளித்திருக்கும் பிரியா பவானி சங்கர் நான் எப்பவுமே தலை நிமிர்ந்து தான் சார் நடந்து கொண்டு இருக்கிறேன்.
உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி என பதிவிட்டு இருக்கிறார் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆக்கி வருகிறது.