இதை பெரிதாக்க iPhone பெட் கட்டி தோத்துட்டேன்.. அதுல்யா ரவி ஓப்பன் டாக்..!

குறும்படங்களில் நடித்து இளம் வட்டாரத்திற்கு இடையில் பிரபலமானவராக பார்க்கப்பட்டு வந்தவர் தான் அதுல்யா ரவி.

இவர் முதல் முதலில் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த காதல் கண் கட்டுதே திரைப்படத்தின் மூலமாக திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.

நடிகை அதுல்யா ரவி:

முதல் படத்திலேயே ஏகோபித்த வரவேற்பை பெற்ற அதுல்யா ரவி மிகக்குறுகிய காலத்திலே இளவட்டம் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.

இதனால் அவருக்கு ரசிகர்கள் பெருகினர். குறிப்பாக கோயம்புத்தூரை சேர்ந்த பெண்ணான இவர் பார்ப்பதற்கு பவ்யமான தோற்றத்திலும் மிகவும் க்யூட்டான எக்ஸ்பிரஷன்ஸ் கொடுத்து நடித்து ஆரம்பத்திலேயே எல்லோரது கவனத்தையும் ஈர்த்த நடிகையாக பார்க்கப்பட்டார்.

---- Advertisement ----

இவர் சிறந்த காதலி மெட்டீரியலில் இருந்ததால் இவருக்கு நிறைய கிரஷ் ஆரம்பத்திலே உண்டாக்கி விட்டார்கள் .

அதன் பிறகு தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க ஏமாளி, நாடோடிகள் 2 , உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்து வந்தார்.

தொடர்ந்து அவர் நடித்த சில படங்கள் தோல்வியை சந்தித்தது. அத்துடன் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காமல் போதனது.

தொடர் தோல்வியால் அதிரடி முடிவு;

இதனால் அதுல்யா ரவி என்ன செய்வது என்று தெரியாமல் தனது சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு கவர்ச்சி காட்டியே வாய்ப்பு தேட ஆரம்பித்தார்.

இதனால் படு கிளாமரான உடைகளை அணிந்து கவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதையும் கவர்ந்தார்.

கவர்ச்சி காட்டுவதன் மூலம் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்தார். அதன்படி சாந்தனு பாக்யராஜ் உடன் சேர்ந்து அவர் முருங்கைக்காய் சிப்ஸ் என்ற ஏடாகூடமான திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இத்திரைப்படத்தில் அவரின் நடிப்பு மிக மோசமாக விமர்சிக்கப்பட்டதோடு விமர்சன ரீதியாக பெரிய அளவில் வெற்றி பெறவில்லை .

இதனால் அதுவும் தோல்வி படமாக அமைந்து விட்டது. நல்ல திரைப்படங்களுக்காக காத்திருக்கிறார். இதனிடையே வாய்ப்பு கிடைக்க கவர்ச்சியான புகைப்படங்களை தன் சமூக வலைதளங்களை பதிவேற்றுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் .

முதல் படத்திலே பிரச்சனை:

இந்நிலையில் முதல் படத்தில் நடித்த அனுபவத்தை பற்றியும் அப்படத்திற்கு ஏற்பட்ட ரிலீஸ் பிரச்சனை குறித்தும் மனம் திறந்து பேசி இருக்கிறார்.

அதாவது, நான் சினிமாவில் அறிமுகமான புதிதில் என்னுடைய முதல் படத்தின் ரிலீஸ் எப்போது என்று தெரியாமல் இருந்தேன்.

என்னிடம் ஒரு தேதி கூறுவார்கள். ஆனால், அந்த தேதியில் படம் வெளியாகாது. அடுத்தடுத்து இப்படி ரிலீஸ் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது.

இந்த நேரத்தில் தான் என் படத்தின் மீதான எதிர்பார்ப்பை பெரிதாக்க என்னுடைய உறவினர்கள் நண்பர்களிடம் படத்தின் ரிலீஸ் குறித்து அடிக்கடி சொல்லிக் கொண்டே இருப்பேன்.

அவர்கள் ஒரு கட்டத்தில் என்னை கிண்டல் அடிக்க ஆரம்பித்து விட்டார்கள். படமே வெளியாகவில்லை நிஜமாகவே நீ படம் எடுத்திருக்கிறாயா? அல்லது உனக்கு ஏதேனும் பைத்தியம் பிடித்து விட்டதா?என்றெல்லாம் கூட பேசினார்கள்.

அதை பெரிதாக்க பெட் கட்டினேன்:

அப்போது எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. ஒருமுறை கண்டிப்பாக இந்த தேதியில் படம் ரிலீஸ் ஆகும் என்று என்னுடைய நண்பர் ஒருவரிடம் கூறினேன்.

ஆனால், அவர் நம்பவே இல்லை ஐபோன் பெட் கட்டி சொல்றேன் கண்டிப்பா இந்த முறை படம் ரிலீஸ் ஆகும் என்று கூறினேன் .

ஆனால், அந்த முறையும் படம் வெளியாகாமல் போய்விட்டது. வேறு வழியே இல்லாமல் என்னுடைய நண்பருக்கு ஐபோன் வாங்கி கொடுத்தேன் என பேசி இருக்கிறார் நடிகை அதுல்யா ரவி.

---- Advertisement ----